×

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்லப்பாண்டியன் தந்தை உடலுக்கு அமைச்சர்கள் அஞ்சலி

 

புதுக்கோட்டை: புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்லப்பாண்டியன் தந்தை கண்ணன் மரணமடைந்ததை தொடர்ந்து அவரது உடலுக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, மெய்யநாதன் அஞ்சலி செலுத்தினர். புதுக்கோட்டை மாவட்டம் முன்னாள் வேளாண் விற்பனைக்குழு தலைவர் அன்புச்செல்வன், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்லப்பாண்டியன், அமெரிக்கா, நியூ ஜெர்சியில் உள்ள சன்பிக்ஸ் டெக்னாலஜீஸ் தலைவர் முருகபாண்டியன் ஆகியோரின் தந்தை எஸ்.கண்ணன் ஆசிரியர் (ஓய்வு) நேற்று முன்தினம் மாலை (13ம் தேதி) காலமானார். இதனை தொடர்ந்து திமுக மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், அரசு அலுவர்கள், உறவினர்கள், நண்பர்கள் என அனைத்து தரப்பினரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

நகராட்சி நிர்வாகதுறை அமைச்சர் கே.என்.நேரு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுசூழல்துறை அமைச்சர் மெய்யநாதன், எம்பிக்கள் பழனிமாணிக்கம், ஆ.ராசா, முன்னாள், இன்னாள் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் உள்ளிட்ட திமுகவினர், தொழில் அதிபர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதி ஊர்வலம், நல்லடக்கம் இன்று (15ம்தேதி) காலை 10 மணியளவில் கீரனூரில் நடைபெற உள்ளது. கந்தர்வகோட்டை கடைவீதியை மிரட்டிய பாம்பு சிக்கியது கந்தர்வகோட்டை, மே 15: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை கடைவீதியில் வியாபரிகள் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்கள். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ரோட்டில் இருந்து பாம்பு ஒன்று தேங்காய் கடைக்குள் புகுந்தது. இதனை கண்ட தேங்காய் வியாபாரி, கந்தர்வகோட்டை தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் கூறினார். தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் பாம்பு பிடிக்கும் கிட்டியுடன் வந்து ஜவுளி கடைக்குள் புகுந்த பாம்பை பல மணிநேர போராட்டத்திற்கு பின் பிடித்தனர்.

 

The post புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்லப்பாண்டியன் தந்தை உடலுக்கு அமைச்சர்கள் அஞ்சலி appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,North District ,DMK ,Chelapandian ,Chellappandian ,Kannan ,
× RELATED புதுக்கோட்டை மாவட்டத்தில் நெடுஞ்சாலை...