×

பார் ஊழியரை தாக்கியவர் கைது

 

சங்ககிரி: சங்ககிரி கோட்டை தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன் (41). இவர், பச்சக்காடு என்ற இடத்தில் டாஸ்மாக் பாரில் வேலை செய்து வருகிறார். நேற்று மாலை, அக்கமாபேட்டையைச் சேர்ந்த சீனிவாசன்(34), பாரில் அமர்ந்து பீர் குடித்துக் கொண்டிருந்தார். அப்போது, பிரபாகரன் டேபிளை சுத்தம் செய்ய வேண்டும் பக்கத்தில் உள்ள டேபிளில் உட்காருங்கள் என்று கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சீனிவாசன், பிரபாகரனை தாக்கியுள்ளார். பின்னர், பீர் பாட்டிலை உடைத்து கொலை மிரட்டல் விடுத்து விட்டு, அங்கிருந்து சென்றார். இதில் காயமடைந்த பிரபாகரன், சங்ககிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில், சங்ககிரி எஸ்ஐ ஸ்ரீராமன் வழக்கு பதிவு செய்து, சீனிவாசனை கைது செய்தனர்.

The post பார் ஊழியரை தாக்கியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Sangakiri ,Prabhakaran ,Sangakiri Fort Street ,Tasmac Bar ,Pacchakadu ,Dinakaran ,
× RELATED துவாரகா வீடியோ மீது நம்பகத்தன்மை...