×

குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை

 

பரமத்திவேலூர்: பரமத்திவேலூர் அருகேயுள்ள வடகரையாத்தூர் மேல்முகம் கிராமம், சரளைமேடு பகுதியில், தனியாருக்கு சொந்தமான கரும்பு ஆலைக்கு நேற்று சிலர் தீ வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து ஜேடர்பாளையத்தில் வடகரையாத்தூர் மற்றும் வீ.கர்ப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொது மக்களிடம், நேற்று மாலை மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங், எஸ்பி கலைச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வடகரையாத்தூர், வீ.கரப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்களிடம், சுமூக நிலை ஏற்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அப்போது கலெக்டர் ஸ்ரேயாசிங் பேசுகையில், ‘தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோர்களை கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்காக காவல் கூடுதலாக போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வருவாய்த்துறை சேர்ந்த வருவாய் ஆய்வாளர்கள். விஏஓ.,க்கள் என 18பேர் அடங்கிய 6 குழுக்கள் அமைக்கப்பட்டு, தொடர் கண்காணிப்பு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. கிராமத்தில் அமைதி நிலை காக்க, அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இயல்பு நிலை பாதிக்காத வகையில், மாவட்ட நிர்வாகத்தால் அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். சுற்றுவட்டார கிராமங்களில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நபர்கள் நடமாடினால், அது பற்றி உடனடியாக காவல்துறைக்கு மக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும்,’ என்றார்.

The post குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Paramathivellur ,Vadakaraiyathur Melmugam ,Saralaimedu ,Paramathivelur ,Dinakaran ,
× RELATED காவல்துறை சார்பில் சிறப்பு குறைதீர் முகாம்