×

தலைஞாயிறில் திமுகவில் அதிக உறுப்பினர் சேர்த்த கிளைக்கு ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கல்

 

வேதாரண்யம்: வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு பேரூராட்சியில் திமுக உறுப்பினர் சேர்க்கையில் தலைஞாயிறு பேரூர் கழகம் 2870 புதிய உறுப்பினர்களை சேர்த்து அதற்கான படிவத்தினை வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் ஜெகவீராபாண்டியனிடம், பேரூர் கழக செயலாளர் சுப்பிரமணியன் வழங்கினார் திமுக உறுப்பினர் சேர்க்கைக்கு ஈடுபட்ட வார்டு கழக செயலாளர்கள், நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார். தலைஞாயிறில் உள்ள பேரூர் கழகத்திலேயே அதிக அளவில் உறுப்பினர்களை இணைத்த 15வது வார்டு கழக நிர்வாகிகளுக்கு பேரூர் கழகத்தின் சார்பில் ரூ.10000/- ரொக்க தொகையாக பேருர் செயலாளர் சுப்பிரமணியன் கிளை கழகத்திற்கு வழங்கினார். தேசிய அளவிலான அரசியல் மாற்றத்திற்க்கு அடித்தளமாக அமைந்த கர்நாடக மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றியை கொண்டாடும் விதமாக தொகுதி தேர்தல் பொறுப்பாளர் ஜெகவீரபாண்டியன் தலைமையில் பேரூர் கழக அலுவலகத்தில் இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடினார். நிகழ்ச்சியில் பேரூர் கழக நிர்வாகிகள் மூத்த முன்னோடிகள் வார்டு கழக செயலாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

The post தலைஞாயிறில் திமுகவில் அதிக உறுப்பினர் சேர்த்த கிளைக்கு ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கல் appeared first on Dinakaran.

Tags : DMK ,New Year's Day ,Vedaranyam ,Vedaranyam taluk ,Thalaignayiru ,Parishad ,
× RELATED வேதாரண்யம் கடற்கரையில் ஒதுங்கும்...