×

1,464 வழக்குகளுக்கு சமரச தீர்வு

 

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் 6 இடங்களில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 1,464 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்ட நிலையில், 4.2 கோடி வழங்க உத்தரவிடப்பட்டது.தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், நேற்று முன்தினம் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்ட முதன்மை நீதிபதி மணிமொழி தலைமை வகித்தார். மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி மோனிகா, மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி சையத் பர்கத்துல்லா, மாவட்ட குடும்ப நல நீதிமன்ற நீதிபதி விஜயகுமாரி, தலைமை குற்றவியல் நடுவர் சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்று, சமரச தீர்வு காணும் வழக்குகள் குறித்து விசாரணை நடத்தினர். வழக்குதாரர்கள், வக்கீல்கள் விசாரணையில் கலந்து கொண்டனர்.

இதேபோல், அரூர் மற்றும் பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம், காரிமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள தாலுகா நீதிமன்றங்களிலும், தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. நீதிமன்றங்களில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள, சமரசம் செய்து கொள்ளக்கூடிய மோட்டார் வாகன விபத்து வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், வங்கி வாரா கடன் வழக்குகள், நில ஆர்ஜித வழக்குகள், உரிமையியல் வழக்குகள், குடும்ப பிரச்னை வழக்குகள், தொழிலாளர் நல வழக்குகள் என மொத்தம் 1,996 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இவற்றில் 1.464 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது. அதற்கான சமரச தொகை ₹4 கோடியே 2 லட்சத்து 75 ஆயிரத்திற்கு தீர்வு காணப்பட்டது.

The post 1,464 வழக்குகளுக்கு சமரச தீர்வு appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,People's Court ,Dinakaran ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி