×

திருச்சி பால்குட ஊர்வலத்தில் நெகிழ்ச்சி 2 ஆம்புலன்ஸ்களுக்கு வழிவிட்ட 20,000 பக்தர்கள்: வீடியோ வைரல்

மணப்பாறை: திருச்சி அருகே மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோயிலில் நடந்த பால்குட ஊர்வலத்தின்போது வந்த 2 ஆம்புலன்ஸ்களுக்கு 20,000 பக்தர்கள் வழிவிட்டு சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. திருச்சி மாவட்டம், மணப்பாறையில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேப்பிலை மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் சித்திரை திருவிழா பால்குடவிழா பிரசித்தி பெற்றதாகும். அதன்படி, பால்குட ஊர்வலம் நேற்று காலை வரதராஜபெருமாள் கோயிலில் இருந்து பரம்பரை அறங்காவலர் வீரமணி தலைமையில் தொடங்கியது. மயிலாட்டம், ஒயிலாட்டம், மேளதாளங்கள், நாதஸ்வரம் முழங்க ராஜவீதிகளின் வழியாக சென்ற பால்குட ஊர்வலம் கோயிலை வந்தடைந்தது. இதில் 20ஆயிரம் பக்தர்கள் பால்குடங்கள் சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பால்குட ஊர்வலம் கோவில்பட்டி பிரிவு சாலை அருகே வந்தபோது, 108 மற்றும் தனியார் ஆம்புலன்ஸ்கள் அவ்வழியே வந்தன. ஆம்புல்னஸ் ஒலியை கேட்டதும் பக்தர்கள், தங்களாகவே ஒதுங்கி ஆம்புன்லன்ஸ்கள் சிரமமன்றி செல்ல வழிவகை செய்தனர். இதையடுத்து பக்தர்கள் வெள்ளத்தில் நீந்தியபடி ஆம்புலன்ஸ்கள் அவ்விடத்தை கடந்து சென்றன. பக்தர்கள் இந்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

The post திருச்சி பால்குட ஊர்வலத்தில் நெகிழ்ச்சி 2 ஆம்புலன்ஸ்களுக்கு வழிவிட்ட 20,000 பக்தர்கள்: வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Tags : Trichy ,Balguda ,Manaparai ,Manaparai Vepilai Mariamman temple ,Tiruchi ,Trichy milk ,
× RELATED மணப்பாறை அருகே வனப்பகுதியில் காட்டுத்தீ!!