×

கர்நாடகா தேர்தலில் தனித் தொகுதிகளில் பாஜவுக்கு மரண அடி: பழங்குடியினர் முழுமையாக புறக்கணித்தனர்

புதுடெல்லி:கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் பாஜவின் தோல்விக்கு தனித் தொகுதிகளில் கிடைத்த மரண அடியும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் ஆளுங்கட்சியாக இருந்த பாஜ 224 தொகுதிகளில் 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை பறி கொடுத்துள்ளது. இதில் பாஜவின் தோல்விக்கான முக்கிய காரணங்களில், தனித் தொகுதிகளில் அதன் மோசமான செயல்பாடும் ஒன்றாக உள்ளது. குறிப்பாக, பழங்குடியினருக்கான எஸ்டி தொகுதிகளில் பாஜ ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. கர்நாடகாவில் மொத்தம் 51 தனித் தொகுதிகள் உள்ளன. இதில் 36 தொகுதிகள் எஸ்சி பிரிவினருக்கும், 15 தொகுதிகள் எஸ்டி பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டன.

இதில் கடந்த 2018ல் 22 இடங்களை கைப்பற்றிய பாஜ இம்முறை வெறும் 12 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. பழங்குடியினருக்கான(எஸ்டி ) 15 தொகுதிகளில் பாஜ வேட்பாளர்கள் மண்ணை கவ்வி உள்ளனர். இதில் 14 தொகுதிகளில் காங்கிரசும், ஒரு தொகுதியில் மஜதவும் வென்றுள்ளன. இதே போல எஸ்சி தொகுதிகளில் 36ல் 24 தொகுதிகளை பாஜ இழந்துள்ளது. இதில் காங்கிரஸ் 21 இடங்களை கைப்பற்றி உள்ளது. மஜத 3 இடங்களில் வென்றுள்ளது. 13 எஸ்சி தொகுதிகளில் பாஜ 2ம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இதன் மூலம், கர்நாடகாவில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் நம்பிக்கையை பாஜ மொத்தமாக இழந்திருப்பது நிரூபணமாகி உள்ளது.

The post கர்நாடகா தேர்தலில் தனித் தொகுதிகளில் பாஜவுக்கு மரண அடி: பழங்குடியினர் முழுமையாக புறக்கணித்தனர் appeared first on Dinakaran.

Tags : BJP ,Karnataka ,New Delhi ,Karnataka assembly elections ,Karnataka Assembly ,
× RELATED கர்நாடக பாஜவின் சர்ச்சைக்குரிய பதிவை...