×

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் பாஜவை வீழ்த்த குறைந்தபட்ச செயல் திட்டம்: சரத்பவார் பேட்டி

மும்பை: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த அபார வெற்றி, பாஜவுக்கு எதிரான கட்சிகளுக்கு உத்வேகம் அளித்துள்ளது. இதையடுத்து, நாடாளுமன்ற தேர்தலில் பாஜவுக்கு எதிராக வியூகம் அமைப்பது குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருடன், மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சியினர் மும்பையில் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதில் உத்தவ் தாக்கரே, சஞ்சய் ராவத், காங்கிரஸ் தலைவர் நானா படோலே உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இதில், நாடாளுமன்ற தேர்தலில் பாஜவுக்கு எதிராக வியூகம் அமைக்கவும், எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து போராடவும் முடிவு செய்யப்பட்டது.
இதுபோல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் டி.ராஜாவும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை நேற்று சந்தித்தார்.

இதன்பிறகு சரத்பவார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘கர்நாடகா மாதிரி பிற மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட வேண்டிய தேவை உள்ளது. பாஜவுக்கு எதிரான ஒருமித்த கருத்துடைய கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட குறைந்த பட்ச செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும். கர்நாடக தேர்தல் நமக்கு ஒரு செய்தியை கூறியுள்ளது. இதே சூழ்நிலை பிற மாநிலங்களிலும் உருவாக வேண்டும். கர்நாடகாவில் காங்கிரஸ் ஒன்றே பாஜவுக்கு மாற்றாக இருந்துள்ளது. மற்ற மாநிலங்களில் பிற கட்சிகளும் இணைய வேண்டும் என்றார். டி.ராஜா கூறுகையில், ‘‘மாநில அளவில் வியூகங்களை வகுக்கலாம். 2024 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மாநில (மகாராஷ்டிரா) தேர்தல்களில் பாஜவை தோற்கடிக்க முடியும். பாஜ வெல்ல முடியாதது என்ற கட்டுக்கதை உடைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

The post எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் பாஜவை வீழ்த்த குறைந்தபட்ச செயல் திட்டம்: சரத்பவார் பேட்டி appeared first on Dinakaran.

Tags : saratbhawar ,Mumbai ,Congress party ,Karnataka Legislative Elections ,Baja ,Dinakaran ,
× RELATED மும்பையில் கடல் சீற்றமாக இருக்கும்;...