×

சென்னை புறநகரில் புதிதாக 7 பேருந்து பணிமனைகள்: போக்குவரத்து அதிகாரிகள் தகவல்

சென்னை சென்னையின் புறநகர் பகுதிகளில் 7 புதிய பணிமனைகள் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்று மாநகர போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் தொழில் வளர்ச்சி அதிகரித்துள்ளதால் நகரின் மக்கள் தொகையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பணி நிமித்தமாக சென்னைக்கு வரும் பெரும்பாலனவர்கள் புறநகர் பகுதிகளில் வசிக்கின்றனர். இதனால் புறநகரில் குடிபெயர்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புறநகரில் இருந்து நகருக்கு பணிக்கு வருவதற்கு போக்குவரத்து சேவை இன்றியமையாததாக உள்ளது. மாநகர போக்குவரத்துக் கழகத்தின் கீழ் உள்ள 31 பணிமனைகளின் வாயிலாக 629 வழித்தடங்களில் 3,233 பேருந்துகள் இயக்கப்படுகின்றது. இந்த பேருந்துகள் புறநகருக்கு இயக்கப்படுகிறது. இருப்பினும் பேருந்து சேவை அதிகளவில் இல்லை என கூறப்படுகிறது.

இதனால் இரவு நேரத்தில் பரவலாக எந்த இடத்தில் பேருந்து சேவை தேவை என்பதை கணக்கிட வேண்டும். பின்னர் அந்த பகுதிக்கு எத்தனை நகர பேருந்துகளை இயக்கலாம் என்பது முடிவு எடுக்கப்படும். மேலும் பெரும்பாலான பணிமனைகள் நகருக்குள் இருப்பதால் இரவு நேரத்தில் சீக்கிரமே திரும்ப வேண்டி உள்ளது. மேலும் இதனால் எரிபொருள் செலவும் அதிகரிக்கிறது. இதை கருத்தில் கொண்டு தையூர், வேளச்சேரி, கும்மிடிப்பூண்டி, தாமரைப்பாக்கத்தில் புதிய பணிமனைகளும், பெரம்பூரில் மேலும் ஒரு பணிமனை மற்றும் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம், குத்தம்பாக்கம் புதியபேருந்து நிலையத்தில் பணிமனைகள் என 7 இடங்களில் அமைக்கப்படும் பணிமனைகள் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்று மாநகர போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post சென்னை புறநகரில் புதிதாக 7 பேருந்து பணிமனைகள்: போக்குவரத்து அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Municipal Transport Corporation ,Chennai.… ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...