×

கிருஷ்ணா நதி நீர் திறப்பு அளவு குறைப்பு: கூடுதலாக திறக்க ஆந்திர அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம்

சென்னை ஆந்திர மாநில பாசனத்துக்கு கண்டலேறு அணையில் இருந்து திருப்பிவிடப்பட்டதால், தமிழகத்துக்கு குறைந்த அளவாக 2 ஆயிரத்து 450 கனஅடி வீதம் நீர் மட்டுமே கிருஷ்ணா நதியில் இருந்து வழங்கப்படுகிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஆந்திர-தமிழக நதிநீர் ஒப்பந்தப்படி, ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி.யும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி.யும், 3 டி.எம்.சி சேதாரம் என மொத்தம் 15 டி.எம்.சி தண்ணீர் தமிழகத்துக்கு வழங்க வேண்டும். குறிப்பாக கண்டலேறுவில் தெலுங்கு -கங்கா ஒப்பந்தப்படி 8 டிஎம்சிக்கு மேல் தண்ணீர் இருந்தால் தமிழகத்துக்கு நீர் திறந்துவிடலாம். இந்நிலையில் தமிழக அரசின் நீர்வளத்துறை அதிகாரிகள் கோரிக்கை வைத்ததால் ஆந்திர அரசின் நீர்வளத்துறை அதிகாரிகள், கடந்த ஜூலை மாதம் முதல் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடிவு செய்தனர். இதைதொடர்ந்து கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு, கடந்த ஜூலை தண்ணீர் திறந்துவிடப்பட்டது. பின்னர் 3.5 டிஎம்சிக்கு பின்னர் நீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் கடந்த 1ம் தேதி, கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு முதலில் 500 கன அடியும் பின்னர் படிப்படியாக உயர்த்தி 2 ஆயிரம் கன அடியாகவும் தற்போது 2,450 கன அடியாகவும் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்ததண்ணீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை- தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டிற்கு 3ம் தேதி வந்தது. கடந்த வாரம் தமிழக எல்லையான ஜீரோ பாயிண்டில் 375 கன அடி தண்ணீர் வந்தது. தற்போது 185 கன அடி தண்ணீராக குறைந்த அளவே வந்துகொண்டிருக்கிறது. கிருஷ்ணா நீர் திருப்பதிக்கும் காளகஸ்திக்கும் திறந்து விடப்பட்டுள்ளதால் குறைந்த அளவே தண்ணீர் வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் ஆந்திர நீர்வளத்துறை அதிகாரிகளிடம், தண்ணீர் குறைந்த அளவு வருவதால் கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும், 2 டிஎம்சி தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி கடிதம் எழுதியுள்ளனர்.

 

The post கிருஷ்ணா நதி நீர் திறப்பு அளவு குறைப்பு: கூடுதலாக திறக்க ஆந்திர அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் appeared first on Dinakaran.

Tags : River ,Tamil Nadu Government ,Andhra Government ,Chennai ,Andhra ,Tamil Nadu ,AP Government ,
× RELATED தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்...