×

கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் தலைமையில் இந்திய குழுவினர்

புதுடெல்லி: கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்கும் இந்திய குழுவிற்கு ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் எல். முருகன் தலைமை வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில், உலகப் புகழ்பெற்ற 76வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா நாளை (மே 16) தொடங்கி வரும் 27ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவில், உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் சிறந்த படங்கள் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்படுவது வழக்கம். இதன்படி, இந்தத் திரைப்பட விழாவில் மிட்நைட் ஸ்கீரினிங் பிரிவில் இயக்குநர் அனுராக் காஷ்யபின் ‘கென்னடி’ திரைப்படம் திரையிட தேர்வாகி உள்ளது.

அதோடு, ஆஸ்கர் விருது பெற்ற ‘தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்’ படத்தின் தயாரிப்பாளர் குனீத் மோங்கா, நடிகர்கள் மனுஷி சில்லர், ஈஷா குப்தா உள்ளிட்ட இந்திய குழு பங்கேற்க உள்ளது. இந்த இந்திய குழுவிற்கு ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன் தலைமை வகிப்பார் என ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்துள்ளது. ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் விழாவின் அறிமுக உரையை வீடியோ கான்பரன்ஸ் மூலம் நிகழ்த்த உள்ளார்.

The post கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் தலைமையில் இந்திய குழுவினர் appeared first on Dinakaran.

Tags : Union Minister ,L. Murugan ,Cannes Film Festival ,New Delhi ,Union Minister of State ,Cannes International Film Festival ,Dinakaran ,
× RELATED தொடர் விபத்து, உயிரிழப்பு குறித்து...