×

26வது முறையாக எவரெஸ்ட் சிகரம் ஏறி புதிய சாதனை: உலக சாதனையை சமன் செய்த நேபாளி

காத்மண்டு: உலகிலேயே அதிகமுறை எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த நேபாளியின் சாதனையை பசங் தவா ஷெர்பா சமன் செய்துள்ளார்.உலகிலேயே அதிக முறை எவரெஸ்ட் சிகரத்தின் 8,848.86 மீட்டர் உயர உச்சியை அடைந்தவர் என்ற சாதனையை நேபாளத்தைச் சேர்ந்த வழிகாட்டியான, 52 வயது, கமி ரீடா ஷெர்பா படைத்திருந்தார். அவர் 26வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து, தமது முந்தைய சாதனையை முறியடித்திருந்தார்.

இந்நிலையில், பசங் தவா ஷெர்பா 26வது முறையாக, 8,849 மீட்டர் உயர உச்சியை அடைந்து, நேபாள வழிகாட்டி கமி ரீடாவின் சாதனையை சமன் செய்துள்ளார். இவர் ஹங்கேரியை சேர்ந்த மலையேறும் வீரருடன் சேர்ந்து நேற்று காலை எவரெஸ்ட் உச்சியை அடைந்தார். இதற்கிடையே கமி ரீடா தனது 27வது பயணத்துக்காக எவரெஸ்ட் அடிவாரத்தில் முகாமிட்டுள்ளார்.இந்த வாரத்தில் மட்டும் 5 வெளிநாட்டினர் உள்பட 19 மலையேற்ற வீரர்கள் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் உச்சியை தொட்டுள்ளனர்.

The post 26வது முறையாக எவரெஸ்ட் சிகரம் ஏறி புதிய சாதனை: உலக சாதனையை சமன் செய்த நேபாளி appeared first on Dinakaran.

Tags : Nepali ,Mount Everest ,Kathmandu ,Basang Dawa Sherpa ,Everest ,Dinakaran ,
× RELATED மாணவிக்கு பாலியல் தொல்லை மதபோதகர் போக்சோவில் கைது