×

மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் குழந்தைகளுடன் வந்து ஆர்வமுடன் சுற்றி பார்த்தனர்

சென்ன: பள்ளி, கல்லூரிகள் விடுமுறையையொட்டி கோடை வாசஸ்தலமான மாமல்லபுரத்தில் சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் குடும்பத்துடன் வந்தனர். தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கிய நிலையிலும், அரசு பொது தேர்வுகள் முடிந்து பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதை முன்னிட்டு மாமல்லபுரத்துக்கு உள்நாட்டு பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. நேற்று, ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் காலை குறைந்த அளவு சுற்றுலாப் பயணிகளே காணப்பட்டனர். பின்னர், மதியம் 1 மணிக்கு பிறகு மாமல்லபுரத்தில் சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் குவியத் தொடங்கினர். இதனால், வெண்ணெய் உருண்டைபாறை, அர்ஜூனன் தபசு, கடற்கரை கோயில், ஐந்துரதம், கலங்கரை விளக்கம் மற்றும் புலிக்குகை போன்ற பகுதிகள் பயணிகள் கூட்டத்தால் களைகட்டியது.

மேலும், கடற்கரையில் ஏராளமானோர் திரண்டு பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ஆபத்தை உணராமல் ஆழமான பகுதியிலும், பாறைகள் நிறைந்த பகுதியிலும் கடலில் ஆனந்த குளியல் போட்டனர். குறிப்பாக, பள்ளிகள் மூடப்பட்டதால் தங்கள் பெற்றோருடன் கோடை விடுமுறையை கழிக்க வந்த சிறுவர், சிறுமிகளும் உற்சாகத்தில் கடலில் மகிழ்ச்சியுடன் குளித்து மகிழ்ந்தனர். மேலும், பயணிகள் புராதன சின்னங்களை கண்டு ரசித்தனர். மேலும், நேற்று ஏராளமான சுற்றுலா வாகனங்கள் மாமல்லபுரம் நகருக்கு படையெடுத்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, தென் மாட வீதி, கடற்கரை செல்லும் சாலை, கிழக்கு ராஜ வீதி, மேற்கு ராஜ வீதி உள்ளிட்ட சாலைகளில் நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்து சென்றன. சில இடங்களில், வெளியே செல்ல முடியாமல் சிக்கி தவித்த வாகனங்களை சட்டம் ஒழுங்கு மற்றும் டிராபிக் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தி அனுப்பினர்.

 

The post மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் குழந்தைகளுடன் வந்து ஆர்வமுடன் சுற்றி பார்த்தனர் appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,Chenna ,Tamil Nadu ,
× RELATED செங்கல்பட்டு – மாமல்லபுரம் இடையே...