×

பார்வையற்றோருக்கான கால்பந்து அணியின் மாஜி கேப்டனுக்கு 10 ஆண்டு சிறை: சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் அதிரடி

டேராடூன்: சிறுமியை பலாத்கார செய்த வழக்கில் பார்வையற்றோருக்கான கால்பந்து அணியின் மாஜி கேப்டனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியை சேர்ந்த பார்வையற்றோருக்கான கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பங்கஜ் ராணா (23) என்பவர், பார்வையற்றோருக்கான கால்பந்து அணிக்கு இரண்டு முறை கேப்டனாக இருந்தார். கடந்த 2015 முதல் 2020ம் ஆண்டு வரை பார்வையற்ற வீரர்களுக்கான சர்வதேச போட்டிகளில் பங்கேற்றார்.

கடந்த 2017ம் ஆண்டு நடந்த அகில இந்திய பார்வையற்றோர் கால்பந்து போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் மீது வழக்கு பதியப்பட்டது. இவ்வழக்கை உத்தரகாசி குற்றவியல் நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘குற்றம்சாட்டப்பட்ட பங்கஜ் ராணாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது.

இரு கண்களும் பார்வையற்ற பங்கஜ் ராணா, சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தார் என்பதற்கான தடவியல் சான்றுகள் சமர்பிக்கப்பட்டுள்ளன. ஆனால் இரு கண்களும் பார்வையற்ற அவர், எவ்வாறு சிறுமியை கடத்தினார் என்பது குறித்த ஆதரங்களை அரசு தரப்பில் தாக்கல் செய்யவில்லை. இருந்த போதும், சிறுமியைக் கடத்துவதற்கு பங்கஜ் ராணாவுக்கு சில குற்றவாளிகள் உதவி செய்திருக்க வேண்டும். வழக்கு விசாரணையின் போது பாதிக்கப்பட்ட சிறுமி பிறழ்சாட்சியாக மாறியதால், அவருக்கு எவ்வித இழப்பீடு வழங்க முடியாது’ என்று தீர்ப்பளித்தார்.

The post பார்வையற்றோருக்கான கால்பந்து அணியின் மாஜி கேப்டனுக்கு 10 ஆண்டு சிறை: சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் அதிரடி appeared first on Dinakaran.

Tags : blind football team ,Dehradun ,blind ,
× RELATED அரசு பார்வையற்றோர் பள்ளியில் பார்வையற்ற கலைஞர்களின் கலை நிகழ்ச்சி