×

வங்கதேசம்-மியான்மர் இடையே மோக்கா புயல் மணிக்கு 210 கிமீவேகத்தில் கரையை கடந்தது

சென்னை: அதி தீவிர மோக்கா புயல் வடக்கு மியான்மர் மற்றும் தென்கிழக்கு வங்கதேச கடற்கரையை கடந்தது. கரையை கடக்கும்போது காற்றின் வேகம் மணிக்கு 210 கி.மீ., வேகத்தில் வீசியது. தற்போது, சிட்வேக்கு வடக்கே சுமார் 40கி.மீ., தொலைவிலும், காக்ஸ் பஜாருக்கு தென்கிழக்கே 145 கி.மீ., தொலைவிலும் மோக்கா நிலைகொண்டுள்ளது.

அடுத்த 3 மணி நேரத்தில் அதி தீவிர மோக்கா புயல் வலுவிழக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது. கரையை கடக்கும் போது காற்றின் வேகம் மணிக்கு 180 முதல் 190 கி.மீ., வேகத்தில் சூறாவளி வீசியதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 முதல் 4 டிகிரி உயரக்கூடும். சென்னையை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை மையம் கூறியுள்ளது.

நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தப்பட்சம் வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸ் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

The post வங்கதேசம்-மியான்மர் இடையே மோக்கா புயல் மணிக்கு 210 கிமீவேகத்தில் கரையை கடந்தது appeared first on Dinakaran.

Tags : Moka Storm ,Bangadesh-Myanmar ,Chennai ,northern Myanmar ,southeastern Bangladesh ,Bangdesh-Myanmar ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...