×

உடலுக்குள் இன்னொரு உயிராய் நம்மைச் சுமந்து, உயிருக்கும் மேலாய் அன்பு செலுத்திடும் அன்னையர் அனைவர்க்கும் அன்னையர் தின வாழ்த்துகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: “உடலுக்குள் இன்னொரு உயிராய் நம்மைச் சுமந்து, உயிருக்கு மேலாய் அன்பு செலுத்திடும் அன்னையர் அனைவருக்கும் வாழ்த்துகள்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தாய்மார்களின் தியாகத்தை போற்றவும், அவர்களை கௌரவிக்கும் விதமாகவும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. உலகந்தோறும் வெவ்வேறு தினங்களில் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.

சில நாடுகளில் மே 10ம் தேதியை அன்னையர் தினமாகக் கொண்டாடுகின்றனர். அமெரிக்கா உள்பட சில நாடுகளில் மே மாதத்தின் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையை அன்னையர் தினமாக கொண்டாடுகின்றனர்.

இந்நிலையில் இன்று உலக அன்னையர் தினம் கடைபிடிக்கப்படும் நிலையில் பல்வேறு பிரபலங்களும், பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது; “உடலுக்குள் இன்னொரு உயிராய் நம்மைச் சுமந்து, உயிருக்கும் மேலாய் அன்பு செலுத்திடும் அன்னையர் அனைவர்க்கும் அன்னையர் தின வாழ்த்துகள்,

அன்பினால் அவனியை நிறைக்கும் தாயின் எதிர்பார்ப்புகளையும் விருப்பங்களையும் மதிப்போம், நிறைவேற்றுவோம்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

The post உடலுக்குள் இன்னொரு உயிராய் நம்மைச் சுமந்து, உயிருக்கும் மேலாய் அன்பு செலுத்திடும் அன்னையர் அனைவர்க்கும் அன்னையர் தின வாழ்த்துகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Mother's Day ,CM. G.K. Stalin ,Chennai ,CM ,B.C. G.K. Stalin ,
× RELATED 5 நாளில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர்...