×

3 நாட்கள் சுற்று பயணமாக இன்று கொடைக்கானல் செல்கிறார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று கொடைக்கானலுக்கு 3 நாட்கள் பயணமாக செல்கிறார். இதனால் கொடைக்கானலில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

3 நாள் சுற்றுப்பயணமாக கொடைக்கானலுக்கு உள்ள தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு சென்று பின்னர் மதுரையிலிருந்து மதியம் 1 மணிக்கு கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். பின்னர் அரசுக்கு சொந்தமான கோகினூர் மாளிகையில் ஆளுநர் தங்குகிறார்.

இதனையடுத்து, நாளை அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் மாணவிகளுடன் கலந்துரையாடுகிறார். இதனைத்தொடர்ந்து மதியம் கொடைக்கானலில் உள்ள பல்வேறு சுற்றுலா இடங்களை ஆளுநர் பார்வையிட்டு பின்னர் மாலையில் மீண்டும் கோகினூர் மாளிகைக்கு செல்கிறார்.

ஆளுநர் நாளை மறுநாள் காலை 10 மணிக்கு மீண்டும் கொடைக்கானலில் இருந்து கார் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு வந்து அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு வருகிறார். ஆர்.என்.ரவி ஆளுநராக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக தமிழ்நாடு வருவது குறிப்பிடத்தக்கது. ஆளுநரின் வருகையையொட்டி கொடைக்கானலில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

The post 3 நாட்கள் சுற்று பயணமாக இன்று கொடைக்கானல் செல்கிறார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி appeared first on Dinakaran.

Tags : Godaikanal ,Tamil Nadu ,Governor ,R.R. N.N. Ravi ,Chennai ,R. N.N. Ravi ,Kodaikanal ,Kodakianal ,
× RELATED மறைந்த வேளாண் விஞ்ஞானி...