×

துறையூரில் மக்கள் நீதிமன்றம் 458 வழக்குகளுக்கு சமரச தீர்வு

 

துறையூர்: துறையூரில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 458 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது. உச்ச நீதிமன்றம், புதுடெல்லி தேசிய மக்கள் நீதிமன்றம் உத்தரவின்படி, தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் வழிகாட்டுதலின் படியும் மாவட்ட சட்டப்பணிகள் குழுவின் ஆலோசனைப்படி நேற்று துறையூர் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும் சார்பு நீதிபதி ஜெய்சங்கர் தலைமையில் துறையூர் சார்பு நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. அதில் துறையூர் மாவட்ட உரிமையியல் நீதிபதி சத்தியமூர்த்தி மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நர்மதாராணி ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்குகளை விசாரணைக்கு எடுத்து சமரசமாக பேசப்பட்டது.

சுமார் 500 வழக்குகளுக்கு மேல் கோப்பிற்கு எடுக்கப்பட்டு 355 வழக்குகள் சமரசமாக பேசி முடிக்கப்பட்டது. மற்றும் வங்கி வாராக் கடன்கள் 103 வழக்குகள் முடிக்கப்பட்டது. சமரச தீர்வு மொத்த வழக்கு 458, தொகையாக ரூபாய் 1,44,31,800 தீர்வு காணப்பட்டது. மக்கள் நீதிமன்றத்தில் துறையூர் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் சுரேஷ்குமார் மற்றும் அரசு வழக்கறிஞர் சந்திரமோகன், அரசு கூடுதல் வழக்கறிஞர்கள் சபாபதி, ஜெயராஜ் மற்றும் ஏராளமான வழக்கறிஞர்களும், வழக்காடிகளும் கலந்துகொண்டு வழக்குகளை சமரச முறையில் நடைபெற முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். மக்கள் நீதிமன்றத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வட்ட சட்டப்பணிகள் குழுவின் முதுநிலை நிர்வாக உதவியாளர் செய்திருந்தார்.

The post துறையூரில் மக்கள் நீதிமன்றம் 458 வழக்குகளுக்கு சமரச தீர்வு appeared first on Dinakaran.

Tags : People's Court ,Tharuyur ,Dariyur ,Supreme Court ,New Delhi ,Dhartiyur ,Dinakaran ,
× RELATED துறையூர் அருகே ஆட்டுக்கு தழை பறித்த...