×

ஊட்டி ரோஜா கண்காட்சியில் பார்வையாளர்களை கவர்ந்த 40 ஆயிரம் மலர்களால் ஆன ஈபிள் டவர்

ஊட்டி: ஊட்டியில் நேற்று ரோஜா கண்காட்சி துவங்கிய நிலையில், 40 ஆயிரம் மலர்களால் ஆன ஈபிள் டவர் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த வாரம் 6ம் தேதி கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியுடன் கோடை விழா துவங்கியது. தொடர்ந்து நேற்று முன்தினம் கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி துவங்கி நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று ஊட்டி ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி துவங்கியது. இதை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி ஆகியோர் துவக்கி வைத்தனர். மாவட்ட கலெக்டர் அம்ரித் உட்பட பலர் கலந்து கொண்டனர். கண்காட்சியில் 40 ஆயிரம் ரோஜா மலர்களை கொண்டு 29 அடி உயரத்தில் ஈபிள் டவர் அமைக்கப்பட்டுள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

இது தவிர, ஊட்டி 200, யானைகள், மட்ைடப்பந்து, இறகுப்பந்து, ஹாக்கி, கால்பந்து, மஞ்சப்பை உட்பட பல்வேறு மலர் அலங்காரங்கள் 50 ஆயிரம் ரோஜாக்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது தவிர திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தோட்டக்கலைத்துறையினர் ரோஜா மலர்களை கொண்டு பல்வேறு அலங்காரங்களை செய்திருந்தனர். மேலும், ரோஜா இதழ்களை கொண்டு பல்வேறு வடிவங்களில் அலங்காரங்களும், ரங்கோலிகளும் அமைக்கப்பட்டிருந்தது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தது மட்டுமின்றி, அதன் அருகே நின்று புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.

The post ஊட்டி ரோஜா கண்காட்சியில் பார்வையாளர்களை கவர்ந்த 40 ஆயிரம் மலர்களால் ஆன ஈபிள் டவர் appeared first on Dinakaran.

Tags : Eiffel Tower ,Ooty Rose Fair ,Ooty ,Rose Exhibition ,Ooty Rose Exhibition ,
× RELATED நாகர்கோவிலில் பொழுது போக்கு...