×

குரூப்-4 பணியிடத்தை 15 ஆயிரமாக அதிகரிக்க விஜயகாந்த் கோரிக்கை

சென்னை: ‘‘டிஎன்பிஎஸ்சி குரூப்-4 பணியிடங்களின் எண்ணிக்கையை குறைந்தபட்சம் 15 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும்’’ என்று விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை:

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு மூலம் கடந்த 2018ம் ஆண்டு 12 ஆயிரம் காலிப்பணியிடங்களும், 2019-ம் ஆண்டு 10 ஆயிரம் காலிப்பணியிடங்களும் நிரப்பப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 10 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வந்தன. ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக எந்த தேர்வும் நடத்தப்படவில்லை. காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை எப்போது வெளியாகும் என்று தேர்வர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.

ஆனால் குறைந்த அளவிலான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டதால் 3 ஆண்டுகளாக போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டு இருந்த மாணவ, மாணவிகளின் மத்தியில் பெருத்த ஏமாற்றமும், இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு டிஎன்பிஎஸ்சி குரூப்- 4 பணியிடங்களின் எண்ணிக்கையை குறைந்தபட்சம் 15 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும்.

The post குரூப்-4 பணியிடத்தை 15 ஆயிரமாக அதிகரிக்க விஜயகாந்த் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Vijayakanth ,Chennai ,DNBSC ,President ,Dinakaran ,
× RELATED விஜயகாந்த் நினைவிடத்திற்கு போலீஸ்...