×

பழங்குடியின பெண்கள் தயாரிக்கும் எம்ப்ராய்டரி ஆடைகள் கோ ஆப்டெக்சில் விற்பனை: கைத்தறி துறை அமைச்சர் காந்தி தகவல்

ஊட்டி: தோடர் பழங்குடியின பெண்கள் தயாரிக்கும் எம்ப்ராய்டரி ஆடைகளை ேகா ஆப்டெக்ஸ் நிறுவனங்களில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் கைத்தறி துறை அமைச்சர் காந்தி தெரிவித்தார். தோடர் எம்ப்ராய்டரி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் துவக்க விழா ஊட்டியில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடந்தது. இதை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி துவக்கி வைத்து பேசியதாவது:
இச்சங்கத்திற்காக ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இங்கு தோடர் பழங்குடியின மக்கள் தயாரிக்கும் சால்வை, பேக்குகள், போர்வை போன்றவை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் முன்னேற்றத்திற்காக கலைஞர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினர். தற்போது மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். கல்விக்கும், பெண்கள் முன்னேற்றத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. தோடர் பழங்குடியின பெண்கள் தயாரிக்கும் எம்ப்ராய்டரி ஆடைகளை ேகா ஆப்டெக்ஸ் நிறுவனங்களில் வைத்து விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.விழாவில் நடந்த நடன நிகழ்ச்சியில், அமைச்சர்கள் காந்தி, ராமசந்திரன் ஆகிேயார் தோடர் பழங்குடியின மக்களுடன் சேர்ந்து நடனமாடினர்.

The post பழங்குடியின பெண்கள் தயாரிக்கும் எம்ப்ராய்டரி ஆடைகள் கோ ஆப்டெக்சில் விற்பனை: கைத்தறி துறை அமைச்சர் காந்தி தகவல் appeared first on Dinakaran.

Tags : Co Optex ,Handloom Minister ,Gandhi ,Eka Optex ,Handloom ,Minister ,Dinakaran ,
× RELATED உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலியில்...