×

இன்று எம்எல்ஏக்கள் கூட்டம் முதல்வராக சித்தராமையாவை தேர்வு செய்ய காங். திட்டம்: டி.கே.சிவகுமார், பரமேஸ்வருக்கு துணை முதல்வர் பதவி வழங்க முடிவு

பெங்களூரு: கர்நாடக மாநில முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக காங்., தலைவர் டிகே சிவகுமார், பரமேஸ்வர் நியமிக்கப்படலாம் எனவும் காங்கிரஸ் வட்டாரத்தில் பேசப்படுகிறது. காங்கிரஸ் கட்சி தனித்து ஆட்சி அமைக்கும் வகையில் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் பெங்களூருவில் இன்று நடைபெறுகிறது. தனியார் ஓட்டலில் நடைபெறும் இக்கூட்டத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூனகார்கே, மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மாநில காங்.,கட்சி தலைவர் டிகேசிவகுமார், முன்னாள் தலைவர் தினேஷ்குண்டுராவ் உள்ளிட்ட புதிதாக வெற்றி பெற்றுள்ள எம்எல்ஏக்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.

இக்கூட்டத்தில் காங்கிரஸ் பேரவை தலைவராக சித்தராமையா தேர்ந்து எடுக்கப்படலாம் என பரவலாக பேசப்படுகிறது. அதே நேரம் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைவதற்காக தீவிரமாக முயற்சி மேற்கொண்ட டிகே சிவகுமார், தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான பரமேஸ்வரும் முதல்வர் பதவிக்கான போட்டியில் உள்ளனர். கர்நாடக மாநில தலைவராக பரமேஸ்வர் தொடர்ந்து 7 வருடம் பணியாற்றினார். 2013ல் நடந்த தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார் என்பதால் முதல்வர் பதவி அவருக்கு கிடைக்காமல் போய்விட்டது. ஆனாலும், காங்கிரஸ் கட்சியில் தலித் முதல்வர் கோரிக்கை எழுந்தது. தற்போது முழு பெரும்பான்மை இடங்களை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ளது. இருப்பினும் அனுபவம் மிக்க சித்தராமையாவை முதல்வர் பதவியில் நியமித்து விட்டு, துணை முதல்வர் பதவிகளில் டி.கே.சிவகுமார் மற்றும் பரமேஸ்வர் ஆகியோரை நியமிக்க காங்கிரஸ் கட்சி ஆலோசித்து வருகிறது.

The post இன்று எம்எல்ஏக்கள் கூட்டம் முதல்வராக சித்தராமையாவை தேர்வு செய்ய காங். திட்டம்: டி.கே.சிவகுமார், பரமேஸ்வருக்கு துணை முதல்வர் பதவி வழங்க முடிவு appeared first on Dinakaran.

Tags : Congress ,Siddaramaiah ,Deputy Chief Minister ,TK Sivakumar ,Parameshwar ,Bengaluru ,Chief Minister of ,Karnataka ,President ,Parameswar ,Deputy ,Chief Minister ,DK Sivakumar ,
× RELATED மோடி தள்ளுபடி செய்தது விவசாயிகளின்...