×

ஜூன் 2ல் வெளியாகும் ஆர்யா படம்

சென்னை: ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் ட்ரம்ஸ்டிக் புரடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘காதர் பாஷா என்கிற முத்துராமலிங்கம்’. குட்டிபுலி, கொம்பன், மருது, விருமன் உள்ளிட்ட படங்களை இயக்கிய முத்தையா இயக்கி உள்ளார். ஆர்யா நாயகனாகவும், சித்தி இதானி நாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்கள் தவிர ஆடுகளம் நரேன், விஜி சந்திரசேகர் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஜீ.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். கிராமத்து பின்னணியில் உருவாகும் ஆக்‌ஷன் படம். இந்த படம் வருகிற ஜூன் 2ம் தேதி தியேட்டர்களில் வெளிவரும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

The post ஜூன் 2ல் வெளியாகும் ஆர்யா படம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Zee Studios ,Drumstick Productions ,Kuttipuli ,Komban ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...