×

பாஜகவில் இருந்து வெளியேறி தனிக்கட்சி தொடங்கிய சுரங்க தொழிலதிபர் ஜனார்த்தன ரெட்டி வெற்றி

பெங்களூரு: கர்நாடக சுரங்கத் தொழிலதிபர் ஜனார்த்தன ரெட்டி பாஜகவிலிருந்து விலகி கல்யாண ராஜ்ய பிரகதி பக்‌ஷா என்ற கட்சியை தொடங்கினார். இந்த தேர்தலில் அவர் கங்காவதி தொகுதியிலும் அவரது மனைவி அருணா லட்சுமி பெல்லாரி தொகுதியிலும் போட்டியிட்டனர். ஜனார்த்தன ரெட்டி கங்காவதி தொகுதியில் 42,547 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இரண்டாவது இடத்தில் காங்கிரசின் இக்பால் அன்சாரி 40,106 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜக இந்த தொகுதியில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

அதன் வேட்பாளர் பரணா ஈஸ்வரப்பா முனாவள்ளி 18,744 வாக்குகளே பெற்றிருந்தார். பெல்லாரி சிட்டி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நர பாரத் ரெட்டி 34003 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார். இந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் சோமசேகர ரெட்டி 21101 வாக்குகள் பெற்றுள்ளார். ஜனார்த்தன ரெட்டியின் மனைவி அருணா லட்சுமி 24875 வாக்குகள் பெற்றுள்ளார். இதன் மூலம் இந்த தொகுதியிலும் பாஜக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. ஜனார்த்தன ரெட்டி பாஜகவில் தொடர்ந்திருந்தால் இந்த இரண்டு தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றிருக்கும்என்று பாஜகவினர் பேசிக்கொள்கிறார்கள்.

The post பாஜகவில் இருந்து வெளியேறி தனிக்கட்சி தொடங்கிய சுரங்க தொழிலதிபர் ஜனார்த்தன ரெட்டி வெற்றி appeared first on Dinakaran.

Tags : Miner ,Janarthana Reddy ,Bajaga ,Bengaluru ,Karnataka ,Janardana Reddy ,Khalyana Rajya Pragati ,Baksha ,Bajaka ,Dinakaran ,
× RELATED பாஜகவின் நிலைப்பாட்டை...