×

ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் அமுதா, உள்துறை செயலாளராக மாற்றம்..!!

சென்னை: ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் பி.அமுதா, உள்துறை செயலாளராக மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக டாக்டர் செந்தில்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் பொதுப்பணித்துறை செயலாளராக சந்திரமோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளராக டி.ஜெகன்நாதன் நியமிக்கப்பட்டுள்ளார். போக்குவரத்துத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக பணீந்திர ரெட்டியை நியமித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

The post ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் அமுதா, உள்துறை செயலாளராக மாற்றம்..!! appeared first on Dinakaran.

Tags : Rural ,Amudha ,Chennai ,P. ,Tamil Nadu Government ,Department of Rural Development ,Dinakaran ,
× RELATED ஊரகப்பகுதிகளில் ஏற்படும் குறைகளைக்...