×

கர்நாடக தேர்தல் தோல்வி மூலம் திராவிட நிலப்பரப்பில் இருந்து பாஜக முற்றிலும் அகற்றம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

சென்னை: கர்நாடக தேர்தல் தோல்வி மூலம் திராவிட நிலப்பரப்பில் இருந்து பாஜக முற்றிலும் அகற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பக்க செய்தியில், பாஜகவின் பழிவாங்கும் அரசியலுக்கு தக்க பாடம் புகட்டி அவர்கள் தங்கள் கன்னடிகப் பெருமிதத்தை நிலைநிறுத்தியுள்ளனர். கர்நாடகத்தில் மிகச்சிறப்பான வெற்றியை பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்துக்கள். கர்நாடக தேர்தல் வெற்றியை தொடர்ந்து 2024 பொதுத்தேர்தலிலும் வெல்ல நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

The post கர்நாடக தேர்தல் தோல்வி மூலம் திராவிட நிலப்பரப்பில் இருந்து பாஜக முற்றிலும் அகற்றம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட் appeared first on Dinakaran.

Tags : Bajaka ,Karnataka ,Chief Minister ,MJ G.K. Stalin ,Chennai ,Mukha ,G.K. Stalin ,B.C. G.K. Stalin ,Dinakaran ,
× RELATED வறட்சி நிவாரணத்தை உடனடியாக விடுவிக்க...