×

தென்னிந்தியாவில் அதிகாரத்தை இழந்த பாஜக… வெற்றி கொண்டாட்டத்தில் காங்கிரஸ்..!!

ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ்:

பெங்களூரு: கர்நாடகத்தில் 130-க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ள காங்கிரஸ் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.

கர்நாடகத்தில் பறிபோகிறது பாஜக ஆட்சி:

தேர்தல் தோல்வியால் கர்நாடகத்தில் ஆட்சியை பறிகொடுத்தது பாரதிய ஜனதா கட்சி. தென்னிந்தியாவில் பாஜக ஆட்சியில் இருந்த ஒரே மாநிலமான கர்நாடகத்திலும் பாஜக ஆட்சியை இழப்பதால் தென்னிந்தியாவில் எந்த மாநிலத்திலும் ஆட்சியில் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் வெற்றி கொண்டாட்டத்தில் சிக்கிய பசவராஜ்:

சாலையில் திரண்டு காங்கிரசார் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கார் நிறுத்தப்பட்டது. முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு காங்கிரசார் வாழ்த்து தெரிவித்து வழி அனுப்பி வைத்தனர்.

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வெற்றி:

கனகபுரா தொகுதியில் கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவக்குமார் வெற்றி பெற்றார். பாஜக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் அசோக் 8,530 வாக்குகளுடன் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

காங்கிரஸ் வேட்பாளர் லக்க்ஷ்மண் சவதி வெற்றி:

பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்த லக்க்ஷ்மண் சவதி அத்தாணி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

காங்கிரஸ் வெற்றி நாடு முழுவதும் கொண்டாட்டம்:

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற உள்ளதை அடுத்து நாடு முழுவதும் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். சத்தீஸ்கர் முதல்வர் புபேஷ் பகேல் தலைமையில் காங்கிரசார் இனிப்புப்கள் வழங்கி மகிழ்ச்சியில் உள்ளனர். டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களிலும் காங்கிரசார் உற்சாக கொண்டாட்டம். சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியினர் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.

 

The post தென்னிந்தியாவில் அதிகாரத்தை இழந்த பாஜக… வெற்றி கொண்டாட்டத்தில் காங்கிரஸ்..!! appeared first on Dinakaran.

Tags : BJP ,South India ,Congress ,Bengaluru ,Karnataka ,Dinakaran ,
× RELATED தென்னிந்தியாவை பாஜக அரசு...