×

கர்நாடக தேர்தல் முடிவு, பாஜக அரசு மீதான அதிருப்தியை வெளிப்படுத்துகிறது: சித்தராமையா பேட்டி

பெங்களூரு: கர்நாடக தேர்தல் முடிவு, பாஜக அரசு மீதான அதிருப்தியை வெளிப்படுத்துகிறது என சித்தராமையா தெரிவித்துள்ளார். தேர்தலில் ராகுல், பிரியங்கா, மல்லிகார்ஜூன கார்கே தீவிரமாக பிரச்சாரம் செய்தனர். ராகுல், பிரியங்கா, கார்கேயின் தீவிர பிரச்சாரம் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. 2018லிலும் தோல்வியைத்தான் பாஜக சந்தித்தது, ஆனால் குறுக்கு வழியில் ஆட்சியமைத்தது. பணபலம் மூலம் கர்நாடகத்தில் வெற்றி பெற பாஜக நினைத்தது. கர்நாடக மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து தேர்தலில் வாக்களித்துள்ளனர். கர்நாடக தேர்தல் வெற்றியானது, மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கான முன்னோட்டம் ஆகும் எனவும் கூறினார்.

The post கர்நாடக தேர்தல் முடிவு, பாஜக அரசு மீதான அதிருப்தியை வெளிப்படுத்துகிறது: சித்தராமையா பேட்டி appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Bajaka Govt ,Bengaluru ,bajka government ,Sidderamaiah ,Rahul ,Priyanka ,Election 2013 ,Bajak Government ,Siddaramaiah ,Dinakaran ,
× RELATED முஸ்லிம்கள் எதிர்ப்பு: இந்தி படத்துக்கு தடை: கர்நாடக அரசு உத்தரவு