×

வெற்றி பெறும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பெங்களூருவுக்கு வர வேண்டும் – காங்கிரஸ் உத்தரவு..!!

தேர்தலில் பின்னடைவு; வெறிச்சோடிய கர்நாடக பாஜக அலுவலகம்:

பெங்களூரு: தேர்தலில் பின்னடைவை சந்திப்பதால் கர்நாடக பாஜக அலுவலகம் வெறிச்சோடியது. கர்நாடக தேர்தலில் பாஜக அமைச்சர்கள் 8 பேர் பின்னடைவை சந்தித்து வருகின்றனர். பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க வாய்ப்புள்ளது.

பாஜகவின் கோட்டையாக கருதப்பட்ட பெல்லாரி தொகுதியில் 3வது இடத்துக்கு தள்ளப்பட்ட பாஜக:

பெங்களூரு: பாஜகவின் கோட்டையாக கருதப்பட்ட பெல்லாரி தொகுதியில் பாஜக 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. பெல்லாரி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் நரபரத்ரெட்டி முன்னிலை வகித்து வருகிறார். சுரங்க அதிபர் ஜனார்த்தன ரெட்டியின் மனைவி லாக்ஷ்மி அருணா 2-வது இடம் பிடித்துள்ளார்.

டெல்லி காங்கிரஸ் அலுவலகங்களில் கொண்டாட்டம்:

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வரும் நிலையில் டெல்லி காங்கிரஸ் அலுவலகத்தில் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

கர்நாடகத்தில் நாளை காங்கிரஸ் எம்.எல்.ஏ க்கள் கூட்டம்:

கர்நாடகத்தில் தனிப்பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. வெற்றி உறுதியாகும் நிலையில் இருப்பதை அடுத்து ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை காங்கிரஸ் தொடங்கியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெறும் நிலையில் இருப்பதை அடுத்து நாளை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. பெங்களூருவில் உள்ள ஹில்டன் ஓட்டலில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் பெங்களூரு வர உத்தரவிடப்பட்டுள்ளது.

The post வெற்றி பெறும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பெங்களூருவுக்கு வர வேண்டும் – காங்கிரஸ் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Congress M. l. PA ,bangaluru ,congress ,Karnataka BJP ,Bengaluru ,Karnataka ,BJP ,Dinakaran ,
× RELATED முன்மொழிந்தவர்களின் கையெழுத்தில்...