×

கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை: காலை 10:30 மணி நிலவரம்; காங்கிரஸ் – 115, பாஜக – 74, மஜத – 29 தொகுதிகளில் முன்னிலை..!!

வாக்குஎண்ணிக்கை முன்னிலை நிலவரம்:

பெரும்பான்மைக்கு தேவையான 113 இடங்களுக்கு அதிகமாக தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. ஆளும் கட்சியான பாஜக 73 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி 27 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியான புலிகேசி நகர் தொகுதியில் பகுஜன் சமாஜ் வேட்பாளர் முன்னிலை. கனபுரா தொகுதியில் போட்டியிட்ட கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவகுமார் முன்னிலை. கனபுரா தொகுதியில் டி.கே.சிவகுமாரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக அமைச்சர் அசோக் பின்னடைவு. கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரும் முன்னாள் முதல்வருமான சித்தராமையா முன்னிலை. வருணா தொகுதியில் சித்தராமையாவை எதிர்த்து போட்டியிட்ட அமைச்சர் சோமண்ணா 2 தொகுதிகளிலும் பின்னடைவு. தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரான தினேஷ் குண்டுராவ், பெங்களுரு காந்தி நகர் தொகுதியில் பின்னடைவு. சித்தாப்பூர் தொகுதியில் மல்லிகார்ஜுன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே முன்னிலையில் உள்ளார். முன்னாள் முதல்வரும் மதசார்பற்ற ஜனதா தள தலைவருமான குமாரசாமி, சென்னபட்னா தொகுதியில் பின்னடைவு. ராம்நகர தொகுதியில் முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி பின்னடைவு. முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா, ஷிகாரிபுரா தொகுதியில் முன்னிலை. கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, சிக்காவ்ன் தொகுதியில் முன்னிலை. பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்த ஜெகதீஷ் ஷெட்டர் தொடர்ந்து பின்னடைவு.

காங்கிரஸ் முன்னிலை:

கர்நாடகா மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. கல்யாண் கர்நாடகா, கிட்டூர் கர்நாடக, மத்திய கர்நாடகா, பழைய மைசூரு பகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது.

பாஜகவை விட காங்கிரசுக்கு 8% வாக்குகள் அதிகம்:

தற்போதைய நிலவரப்படி பாஜகவை விட காங்கிரஸ் கட்சி 8 சதவீதம் வாக்குகள் அதிகம் பெற்றுள்ளது. காங்கிரஸ் 43.6 சதவீதமும், பாஜக 36.6 சதவீதமும் வாக்குகளை பெற்றுள்ளன.

தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி காங்கிரஸ் 100,பாஜக 68

தேர்தல் ஆணையம் இதுவரை வெளியிட்ட முடிவின்படி 100 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை. பெருபான்மைக்கு தேவையான 113 இடங்களுக்கும் அதிகமான தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை பெற்ற நிலையில் இதுவரை வெளியான முடிவுகளின்படி 117 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. ஆளும் கட்சியான பாஜக 76 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி 28 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

 

The post கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை: காலை 10:30 மணி நிலவரம்; காங்கிரஸ் – 115, பாஜக – 74, மஜத – 29 தொகுதிகளில் முன்னிலை..!! appeared first on Dinakaran.

Tags : Karnataka Assembly Elections ,Congress—115 ,Bajaga—74 ,Majhta ,Congress ,Bajaka ,Majheta ,
× RELATED `சக்தி திட்டத்தால் தான் நான் சட்டம்...