×

கட்டிக்குளத்தில் மே 31ல் ஜல்லிக்கட்டு

மானாமதுரை, மே 13: மானாமதுரை அருகே கட்டிக்குளம் கிராமத்தில் மே 31ம் தேதி திருவேட்டை அய்யனார் கோயில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது.மானாமதுரை அருகே கட்டிக்குளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற சித்தர் சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் அருகே உள்ள திருவேட்டை அய்யனார் கோயிலில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக வைகாசி மாதத்தில் ஜல்லிக்கட்டு திருவிழா நடந்து வருகிறது.

இந்த ஜல்லிக்கட்டில் ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த காளைகளும், மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்வது வழக்கம்.இந்தாண்டு ஜல்லிக்கட்டை வரும் 31ம் தேதி கிராமத்தினர் முடிவு செய்து, அதற்கான பணிகளை துவக்கியுள்ளனர். ஜல்லிக்கட்டு மைதானத்தை சீரமைப்பது, பந்தல் அமைப்பது, பரிசுகள் வாங்குவது உள்ளிட்ட பணிகளை கிராமத்தினர் செய்து வருகின்றனர்.

The post கட்டிக்குளத்தில் மே 31ல் ஜல்லிக்கட்டு appeared first on Dinakaran.

Tags : Jallikattu ,Kattikulam ,Manamadurai ,Tiruvetta Ayyanar Temple ,Kattikkulam ,
× RELATED மானாமதுரை வைகையில் தூய்மைப்பணி