நிலக்கோட்டை, மே 13: நிலக்கோட்டையில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற உயர்கல்வி தொடர்பான வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டனர். நிலக்கோட்டையில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ள மகளிர் வாழ்வாதார அலுவலக கட்டிடத்தில் சைல்டு வாய்ஸ் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நிலக்கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புற மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தனியார் தொண்டு நிறுவன இயக்குனர் அண்ணாதுரை தலைமை வகித்தார்.
கள ஒருங்கிணைப்பாளர் சிவநாகஜோதி முன்னிலை வகித்தார். சைல்டு வாய்ஸ் திட்ட மேலாளர் அருண்ராஜா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக செயின்ட் ஆண்டனி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர்கள் கவிதா, ஆன்டனி ஜஸ்டினாமேரி, அனுகிரகா, கல்லூரி சமூக பணித்துறை பேராசிரியர் ஜோசப் வில்லியம்ஸ், நிலக்கோட்டை அன்னை அகடாமி நிறுவன இயக்குனர் காசிமாயன் ஆகியோர் கலந்து கொண்டு உயர் கல்வியில் உள்ள வாய்ப்புகள், உயர் கல்வியை தேர்வு செய்யும் விதம், எதிர்கால திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார். இந்நிகழ்சியில் நிலக்கோட்டை அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 10 மற்றும் பிளஸ் 2 முடித்த 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில், கள ஒருங்கிணைப்பாளர் இந்திரா நன்றி கூறினார்.
The post நிலக்கோட்டையில் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி: மாணவிகள் திரளாக பங்கேற்பு appeared first on Dinakaran.
