×

கயத்தாறு அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 1,600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

தூத்துக்குடி, மே13: தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் எஸ்ஐ பாரத் லிங்கம் தலைமையில் கயத்தாறு சுங்கச்சாவடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது கோவில்பட்டி பகுதியில் இருந்து கன்னியாகுமரி நோக்கி சென்ற லோடு ஆட்டோவை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் தலா 40 கிலோ எடை கொண்ட 40 பிளாஸ்டிக் சாக்கு மூட்டைகளில் மொத்தம் 1600 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் ரேஷன் அரிசி மற்றும் லோடு ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

லோடு ஆட்டோவை ஓட்டி வந்த கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரம் திருமூலநகரை சேர்ந்த அருள்ராஜ் என்ற ராமு (46) என்பரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கோவில்பட்டி பகுதியில் வாங்கிய இந்த ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. இது குறித்து குடிமைப்பொருள் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான கன்னியாகுமரி மாவட்டம் கவிAலூர் சரல்விளையை சேர்ந்த விஜயகுமார், கேரளா மாநிலம் நெய்யாற்றின்கரை அருகேயுள்ள பாரசுவைக்கல் பகுதியை சேர்ந்த சரத் என்ற மகேஷ் ஆகிய இருவரை தேடி வருகின்றனர்.

The post கயத்தாறு அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 1,600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Kerala ,Kayathar ,Thoothukudi ,Thoothukudi Civic Supply Crime Investigation Division ,SI Bharat Lingam ,Dinakaran ,
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...