×

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 49 பேரின் ஒரு நாள் ஊதியம் நிறுத்தம்: தற்செயல் விடுப்பு போராட்டம்

வேலூர், மே 13: கோரிக்கைகளை வலியுறுத்தி தற்செயல் விடுப்பில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் 49 பேரின் ஒரு நாள் சம்பளத்தை பிடித்தம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் தங்களது 8 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக மே 11ம் தேதி ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தப்போவதாக அச்சங்கத்தினர் அறிவித்து இருந்தனர். இதுதொடர்பாக முன்கூட்டியே அரசுக்கும் தகவல் தெரிவித்திருந்தனர்.

அதன்படி, நேற்று முன்தினம் (11ம் தேதி) ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டத்தில் இப்போராட்டத்தில் 49 பேர் பங்கேற்றனர். இவர்கள் உட்பட மாநிலம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலகங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். இதையடுத்து தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் அனைவருக்கும் நேற்று முன்தினம் 11ம்தேதி ஒரு நாள் சம்பளத்தை பிடித்தம் செய்ய அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

The post ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 49 பேரின் ஒரு நாள் ஊதியம் நிறுத்தம்: தற்செயல் விடுப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Vellore ,Rural Development Department ,
× RELATED மழையால் வெறிச்சோடிய பொய்கை மாட்டுச்சந்தை