×

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: திண்டுக்கல் காங். தலைவர் சஸ்பெண்ட்

சென்னை: சென்னையைச் சேர்ந்த பெண் வக்கீல் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அப்துல் கனி ராஜாவை கொடைக்கானல் போலீசார் கைது செய்தனர். அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘‘ தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து எஸ்.அப்துல்கனி ராஜா, மேலிட தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் அறிவுறுத்தலின் படி தற்காலிகமாக இடை நீக்கம் செய்யப்படுகிறார். தம் மீதான நடவடிக்கை குறித்து உரிய விளக்கத்தை 7 நாட்களுக்குள் காங்கிரஸ் தலைமைக்கு அவர் தெரிவிக்க வேண்டும்’’ என கூறியுள்ளார்.

The post பெண்ணுக்கு பாலியல் தொல்லை: திண்டுக்கல் காங். தலைவர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Thintukal Kong ,President Suspend ,Chennai ,Dindigul Eastern District Congress ,Abdul ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...