×

ககன்யான் ராக்கெட் திட்டத்தின் 2 ஜி விகாஷ் இன்ஜின் வெப்ப பரிசோதனை வெற்றி: மகேந்திரகிரியில் நடந்தது

நெல்லை: மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் ககன்யான் ராக்கெட் திட்டத்தின் 2 ஜி விகாஷ் இன்ஜின் வெப்ப பரிசோதனை நேற்று வெற்றிகரமாக நடந்தது. நெல்லை மாவட்டம் பணகுடி அருகே மகேந்திரகிரி ஒன்றிய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவில் நேற்று மாலை 4 மணிக்கு ககன்யான் 2ஜி விகாஷ் இன்ஜின் 2ம் கட்ட வெப்ப பரிசோதனை 603 விநாடிகள் தொடர் சோதனையில் வெற்றி அடைந்தது.

இஸ்ரோ தலைவர் சோம்நாத் முன்னிலையில் இஸ்ரோ வளாக இயக்குநர் ஆசீர் பாக்கியராஜ் மற்றும் இஸ்ரோ தொழில்நுட்ப பணியாளர்கள் முன்னிலையில் 603 விநாடிகள் நடைபெற்ற பரிசோதனை திட்டமிட்டபடி வெற்றிகரமாக நடந்ததாக இஸ்ரோ தரப்பில் அறிவிக்கப்பட்டது.இந்தியாவின் கனவுத்திட்டமான இந்த சோதனை வெற்றிக்கு பின் 2024ம் ஆண்டு இறுதியில் 3 இந்திய வீரர்களை விண்வெளிக்கு அனுப்பப்படுகின்றனர். 2 வார கால விண்வெளி ஆய்வுக்கு பிறகு அவர்கள் பூமிக்கு பத்திரமாக திரும்புவதே ககன்யான் திட்டத்தின் நோக்கமாகும். இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் இந்த விண்கலமானது ஜிஎஸ்எல்வி மார்க் III மூலம் 2024ம் ஆண்டில் விண்ணில் ஏவப்பட உள்ளது.

The post ககன்யான் ராக்கெட் திட்டத்தின் 2 ஜி விகாஷ் இன்ஜின் வெப்ப பரிசோதனை வெற்றி: மகேந்திரகிரியில் நடந்தது appeared first on Dinakaran.

Tags : Mahendragiri ,2G ,Engine ,Kaganyan ,Mahendragiri ISRO Center ,
× RELATED 2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற...