வாஷிங்டன்: டிவிட்டரை உலக பணக்காரர்எலான் மஸ்க் வாங்கிய பிறகு தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால், தலைமை நிதி அதிகாரி நெட் செகல், டிவிட்டர் சட்ட மற்றும் கொள்கை நிர்வாகி விஜய காடே உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் புதிய டிவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரியை தேர்வு செய்துள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். அவர் 6 வாரங்களில் பணியை தொடங்குவார் என்று எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார். என்பிசி யூனிவர்சல் நிர்வாகி லிண்டா யாக்காரினோவை டிவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்படுவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.
The post டிவிட்டருக்கு புதிய சிஇஓ நியமனம் appeared first on Dinakaran.