×

ஒருங்கிணைந்த நூலக பணி 27 இடத்துக்கு 4468 பேர் போட்டி: சென்னை உள்பட 7 மாவட்டத்தில் இன்றும், நாளையும் நடக்கிறது

சென்னை: ஒருங்கிணைந்த நூலக பணியில் காலியாக உள்ள 27 இடத்துக்கான எழுத்து தேர்வு இன்றும், நாளையும் நடக்கிறது. டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த நூலக பணிகள், சார்நிலை பணிகளில் அடங்கிய பதவிகளில்(நேர்முக தேர்வு, நேர்முக தேர்வு அல்லாதது) காலியாக உள்ள 27 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜனவரி 31ம் தேதி வெளியிட்டது. தேர்வுக்கு விணப்பிக்க மார்ச் 1ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இத்தேர்வு எழுத 4468 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆண்கள் 1998 பேர், பெண்கள் 2470 அடங்குவர். இவர்களுக்கான கணினி வழித்தேர்வு இன்றும், நாளையும் நடக்கிறது. இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கும் தேர்வு பிற்பகல் 12.30 மணி வரை நடக்கிறது. முதல் தாள் தேர்வு (நூலகம் மற்றும் தகவல் அறிவியல்-பட்டப்படிப்பு தரம்) பிற்பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரை இரண்டாம் தாள் தேர்வு நடக்கிறது. 14ம் தேதி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை முதல் தாள் தேர்வு(முதுகலை பட்டப்படிப்பு தரம்) தேர்வும் நடக்கிறது. இத்தேர்வு சென்னை உள்பட 7 மாவட்டங்களில் 11 தேர்வு கூடங்களில் நடக்கிறது. தேர்வு கண்காணிப்பு பணியில் 11 தலைமை கண்காணிப்பாளர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

The post ஒருங்கிணைந்த நூலக பணி 27 இடத்துக்கு 4468 பேர் போட்டி: சென்னை உள்பட 7 மாவட்டத்தில் இன்றும், நாளையும் நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Library ,TNPSC ,Dinakaran ,
× RELATED முசிறி கிளை நூலகத்தில் குழந்தைகளுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி