×

மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 20ம் தேதி திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம்

சென்னை: சென்னையில் வருகிற 20ம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் நடைபெறும் என்று துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுகுறித்து, திமுக பொது செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் வருகிற 20ம் தேதி (சனிக்கிழமை) காலை 10.30 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் நடைபெறும். இதில் உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். கலைஞரின் நூற்றாண்டு விழா பொருள் குறித்து கூட்டம் நடைபெறும்.

The post மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 20ம் தேதி திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK High ,Level Action Plan Committee ,MK Stalin ,Chennai ,DMK ,High Level Action Plan ,Committee ,M.K.Stal ,DMK High Level Action Plan Committee ,Dinakaran ,
× RELATED இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு...