×

பிரபஞ்சத்தில் அதிசய நிகழ்வு; இதுவரையிலும் பார்த்திராத மிகப்பெரிய அண்ட வெடிப்பு: வானியல் ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு

புதுடெல்லி: பிரபஞ்சத்தில் இதுவரை கண்டிராத மிகப்பெரிய அண்ட வெடிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அண்ட வெடிப்பு தொடர்பான ஆய்வு குறித்து ராயல் வானியல் சங்கத்தின் மாதாந்திர இதழில் வெளியிடப்பட்டுள்ள தகவலில், ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கிய சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் பிலிப் வைஸ்மேன் கூறியிருப்பதாவது:

பிரபஞ்சத்தில் நாங்கள் நட்சத்திர வெடிப்பை தேடிய போது தற்செயலாக இந்த அதிசய நிகழ்வை காண முடிந்தது. ஏடி2021எல்டபிள்யுஎக்ஸ் என்று அழைக்கப்படும் அண்ட வெடிப்பு இன்னமும் தொலைநோக்கிகள் மூலம் தெரிவதை கண்டறிந்தோம். முதலில் கடந்த 2020ம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஸ்விக்கி டிரான்சியண்ட் பெசிலிட்டி தொலைநோக்கி மூலம் இந்த அண்ட வெடிப்பு கண்டறியப்பட்டது.

இது கிட்டத்தட்ட 800 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில், பிரபஞ்சம் சுமார் 600 ஆண்டுகள் பழமையானதாக இருந்த போது நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது. இன்னமும் இந்த அண்ட வெடிப்பு பிரகாசமாக தென்படுகிறது. பொதுவாக ஒரு நட்சத்திரம் அழிக்கப்படும் போது கூட அவை சில மாதங்கள் மட்டுமே பிரகாசமாக இருக்கும். ஆனால், 3 ஆண்டுக்கும் மேலாக பிரகாசமாக இருப்பது இதுவரை பார்க்காத அதிசய நிகழ்வாகும். இவ்வாறு அவர் கூறினார்.

The post பிரபஞ்சத்தில் அதிசய நிகழ்வு; இதுவரையிலும் பார்த்திராத மிகப்பெரிய அண்ட வெடிப்பு: வானியல் ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : event ,New Delhi ,
× RELATED எல் நினோ நிகழ்வால் கிழக்கு ஆப்ரிக்க...