×

இணைய வழி வழக்கு தாக்கல் 2.0 சேவை: உச்ச நீதிமன்றத்தில் துவக்கி வைப்பு

புதுடெல்லி: உச்சநீதிமன்றத்தில் இணைய வழி வழக்கு தாக்கல் 2.0 சேவையை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நேற்று துவக்கி வைத்தார். நாடு முழுவதும் இணைய வழி வழக்கு தாக்கல் (இ-பைலிங்) நடைமுறை கொண்டுவர வேண்டும், இ-கோர்ட்டுகளை துவக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில் உச்சநீதிமன்ற வளாகத்தில் இணைய வழி வழக்கு தாக்கல் 2.0 சேவை, இ சேவை மையத்தையும் தலைமை நீதிபதி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி பேசுகையில்,‘‘வழக்கறிஞர்களுக்கு இணைய வழி வழக்கு தாக்கல் செய்வதற்கான வசதி 24 மணி நேரமும் கிடைக்கும். தொழில்நுட்பங்களை கையாள முடியாமல் இருக்கும் வழக்கறிஞர்களுக்கு உதவுவதற்காக 2 உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. இதை அனைத்து வழக்கறிஞர்களும் பயன்படுத்தி கொள்ள வேண்டும். அதே போல் இ சேவை மையங்களுக்கு சென்று இணைய வழி வழக்கு தாக்கல் செய்வதோடு நாட்டின் வேறு பகுதிகளில் உள்ள நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்களில் உள்ள வழக்குகளின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்’’ என்றார்.

The post இணைய வழி வழக்கு தாக்கல் 2.0 சேவை: உச்ச நீதிமன்றத்தில் துவக்கி வைப்பு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,New Delhi ,Chief Justice ,DY ,Chandrachud ,Dinakaran ,
× RELATED உச்ச நீதிமன்ற வழக்கு விவரம் வாட்ஸ்அப்...