×

ஆன்லைன் விற்பனை நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு நோட்டீஸ்

டெல்லி: முதல் 5 இணைய வர்த்தக தளங்களுக்கு எதிராக ஒன்றிய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019ஐ மீறுவதால், கார் சீட் பெல்ட் அலாரம் ஸ்டாப்பர் க்ளிப்களை விற்பனை செய்யும் முதல் 5 இணைய வர்த்தக தளங்களுக்கு எதிராக ஒன்றிய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அமேசான் , பிளிப்கார்ட் ,ஸ்னாப்டீல் , ஷாப்க்லூஸ், மீஷோ ஆகியவற்றிற்கு எதிராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காரில் சீட் பெல்ட் அணியாவிட்டால் எச்சரிக்கும் அலாரத்தை நிறுத்தும் கார் சீட் பெல்ட் அலாரம் ஸ்டாப்பர் க்ளிப்களை விற்பனை விவகாரம் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கடிதத்தின் மூலம் நுகர்வோர் விவகாரத் துறையின் ஆணையத்திற்கு தெரியவந்துள்ளது.

விற்பனை செய்யும் ஆன்லைன் தளங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், ஆலோசனை வழங்கவும் கோரப்பட்டது. அதன்படி அனைத்து கார் சீட் பெல்ட் அலாரம் ஸ்டாப்பர் க்ளிப்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய மோட்டார் வாகன உதிரிபாகங்களை நிரந்தரமாக நீக்குமாறு இணைய வர்த்தக தளங்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இதுசார்ந்த சுமார் 13 ஆயிரத்து 118 பட்டியல்கள் வெவ்வேறு தளங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

 

The post ஆன்லைன் விற்பனை நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Union Government ,Delhi ,Union Consumer Protection Commission ,Consumer Protection ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை தொடர்ந்து மேலும் சலுகை