×

மும்பை அணுமின் நிலையத்தில் 65 காலியிடங்கள்

பணியிடம் விவரம்:

1. Junior Purchase Assistant/Junior Storekeeper: (Group-C)
மொத்த இடங்கள்: 65 (பொது-12, ஒபிசி-8, எஸ்சி-23, பொருளாதார பிற்பட்டோர்-22). வயது: 18 முதல் 27க்குள் (அதாவது விண்ணப்பதாரர்கள் 15.05.96 க்கும் 15.05.2005க்கும் இடையே பிறந்தவராக இருக்க வேண்டும்). எஸ்சி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், பொதுப் பிரிவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 13 ஆண்டுகளும், எஸ்சியினருக்கு 15 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் இருந்து தளர்வு அளிக்கப்படும்.

சம்பளம்: ரூ.25,500- 81,100.

தகுதி: 60% தேர்ச்சியுடன் அறிவியல் அல்லது வணிகவியலில் பட்டப்படிப்பு அல்லது 60% தேர்ச்சியுடன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்/எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்/எலக்ட்ரானிக்ஸ்/ கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடங்களில் டிப்ளமோ தேர்ச்சி.

கட்டணம்: ரூ.200/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். (பெண்கள், எஸ்சி.எஸ்டி பிரிவினர் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை).கொள்குறி வகை (Objective Type), விரிவான விடை எழுதுதல் (Descriptive Type) ஆகிய 2 வகையான எழுத்துத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தமிழ்நாட்டில் சென்னையில் தேர்வு நடைபெறும்.

https://dpsdae.formflix.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.05.23.

The post மும்பை அணுமின் நிலையத்தில் 65 காலியிடங்கள் appeared first on Dinakaran.

Tags : Mumbai Nuclear Station ,Mumbai Atomic Station ,Dinakaran ,
× RELATED தள்ளாத வயதிலும் கவனம் ஈர்த்த தலையாய...