×

விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தில் 661 ஆசிரியரல்லாத பணிகள்

பணியிடங்கள் விவரம்:

1. Lower Division Clerk: 95 இடங்கள் (பொது-36, ஒபிசி-22, எஸ்சி-22, எஸ்டி-5, பொருளாதார பிற்பட்டோர்-10). வயது: 32க்குள். தகுதி: ஏதேனும் ஒரு இளநிலை பட்டத்துடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் டைப்பிங் செய்யும் திறன் மற்றும் கம்ப்யூட்டரில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
2. Multi Tasking Staff: 405 இடங்கள் (பொது-177, ஒபிசி-89, எஸ்சி-70, எஸ்டி-13, பொருளாதார பிற்பட்டோர்-40, மாற்றுத்திறனாளி-16). வயது: 32க்குள். தகுதி: 10ம் வகுப்பு அல்லது ஐடிஐ.
3. Library Attendant: 30 இடங்கள் (பொது-12, ஒபிசி-6, எஸ்சி-6, எஸ்டி-2, பொருளாதார பிற்பட்டோர்-3, மாற்றுத்திறனாளி-1). வயது: 32க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் நூலக அறிவியல் பாடத்தில் சான்றிதழ் படிப்பு மற்றும் கம்ப்யூட்டரில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
4. Laboratory Attendant: 45 இடங்கள் (பொது-17, ஒபிசி-10, எஸ்சி-10, எஸ்டி-2, பொருளாதார பிற்பட்டோர்-4, மாற்றுத்திறனாளி-2). வயது: 32க்குள். தகுதி: அறிவியல் பாடத்தில் பிளஸ் 2 தேர்ச்சி அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் 2 வருட லேப் அசிஸ்டென்ட் பணி அனுபவம்.
5. Junior Engineer (Electrical): 1 இடம் (ஒபிசி). வயது: 35க்குள். தகுதி: எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ., படிப்புடன் ஒரு வருட பணி அனுபவம் அல்லது டிப்ளமோ படிப்புடன் 3 வருட பணி அனுபவம்.
6. Junior Engineer (Civil): 9 இடங்கள் (பொது-4, ஒபிசி-4, பொருளாதார பிற்பட்டோர்-1). வயது: 35க்குள். தகுதி: சிவில் இன்ஜினியரிங்கில் பி.இ., படிப்புடன் ஒரு வருட பணி அனுபவம் அல்லது டிப்ளமோவுடன் 3 வருட பணி அனுபவம்.
7. Upper Division Clerk/Office Assistant: 28 இடங்கள் (பொது-12, ஒபிசி-6, எஸ்சி-7, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-2) வயது: 32க்குள். தகுதி: ஏதேனும் ஒரு இளநிலைப் பட்டப்படிப்புடன் ஆபீஸ் அசிஸ்டென்டாக 2 வருட பணி அனுபவம். நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் என்ற வேகத்தில் ஆங்கிலத்தில் டைப்பிங் செய்யும் திறன் மற்றும் கம்ப்யூட்டரில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
8. Laboratory Assistant: 16 இடங்கள் (பொது-7, ஒபிசி-4, எஸ்சி-3, பொருளாதார பிற்பட்டோர்-1, மாற்றுத்திறனாளி-1). வயது: 32க்குள். தகுதி: ஏதேனும் ஒரு பிஎஸ்சி பட்டப்படிப்புடன் அறிவியல் உபகரணங்களை பயன்படுத்துவதில் 2 வருட பணி அனுபவம்.
9. Private Secretary: 7 இடங்கள் (பொது-4, ஒபிசி-2, எஸ்சி-1). வயது: 35க்குள். தகுதி: ஏதேனும் ஒரு இளநிலைப் பட்டப்படிப்புடன் பெர்சனல் அசிஸ்டென்ட்டாக 3 வருட பணி அனுபவம். ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 120 வார்த்தைகள் சுருக்கெழுத்து எழுதும் திறன் மற்றும் 35 வார்த்தைகள் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
10. Personal Assistant: 8 இடங்கள் (பொது-5, ஒபிசி-2, எஸ்சி-1). வயது: 35க்குள். தகுதி: ஏதேனும் ஒரு இளநிலைப் பட்டப்படிப்புடன் நிமிடத்திற்கு 100 வார்த்தைகள் ஆங்கிலத்தில் சுருக்கெழுத்து எழுதும் திறன், நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் டைப்பிங் செய்யும் திறன் மற்றும் 2 வருட ஸ்டெனோகிராபர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
11. Technical Assistant: 17 இடங்கள் (பொது-8, ஒபிசி-3, எஸ்சி-3, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-1, மாற்றுத்திறனாளி-1). வயது: 32க்குள். தகுதி: Social Work/Visual Communication/Printing Technology/ Lab Technology/Information Technology ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் இளநிலை பட்டம் பெற்று அறிவியல் உபகரணங்களை பயன்படுத்துவதில் 3 வருட பணி அனுபவம்.

சம்பளம்: மேற்குறிப்பிட்ட அனைத்து பணிகளுக்கும் 7வது ஊதியக் குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பதாரரின் வயது வரம்பு 16.5.2023 தேதியின்படி கணக்கிடப்படும். வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்களும், விளையாட்டு வீரர்களுக்கு 5 வருடங்களும் சலுகை தரப்படும்.எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.

கட்டணம்: பொது/ஒபிசி/ பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.900/- எஸ்சி/எஸ்டி ரூ.225/- மாற்றுத்திறனாளிகள், பெண்களுக்கு கட்டணம் கிடையாது. இதை ஆன்லைனில் செலுத்தவும். www.visva-bharati.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.5.2023.

The post விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தில் 661 ஆசிரியரல்லாத பணிகள் appeared first on Dinakaran.

Tags : Visvaparati University ,Dinakaran ,
× RELATED இருப்பவல் திருப்புகழ்