×

மீண்டும் ஒரு மகளிர் மட்டும்!

1990களில் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் என செய்திகள் துவங்கி ‘மகளிர் மட்டும்’ படம் வரையிலும் டிரெண்டானார் வசந்த குமாரி. அவருக்குப் பின் இப்படி பேருந்து ஓட்டுநராக பெண்கள் யாரும் பெரிதாக முன்வரவில்லை. இதோ மீண்டும் தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் பெண் ஒருவர் பேருந்து ஓட்டுநராக பணிபுரியும் காட்சி வைரலாகி வருகின்றது. கோவை மாவட்டம் காந்திபுரம், சோமனூர் வழியில் தனியார் பேருந்தில் சாரதியாக ஷர்மிளா என்ற பெண் பணியாற்றி வருகின்றார். இவரது காணொளி இணையத்தில் கடும் வைரலாகி வருகின்றது. இவருக்கு 7ம் வகுப்பு படிக்கும் போதே கனரக வாகனங்களை இயக்குவதற்கு அதிகமாக ஆர்வம் இருந்துள்ளது. இதனால் தற்போது முறையான பயிற்சி மேற்கொண்டு அதற்கான உரிமத்தையும் பெற்றுள்ளார். இதற்கு முழுவதும் அவரது தந்தை உதவியாக இருந்ததுடன், கோவையில் முதல் கனரக பெண் ஓட்டுநர் என்ற பெயரை பெற்றுள்ளார். பயிற்சிக்கு செல்ல ஆரம்பித்த போது நகைப்புடன் ஏளனமாக பார்த்தவர்கள் எல்லாம் இன்று வியப்பாக பார்க்கிறார்கள்.

கிங் ஆஃப் ஹார்ட்ஸ்

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஐபிஎல் கிரிக்கெட் நிமித்தமாக சமீபத்தில் கொல்கத்தா வந்திருந்தார். இவரது ஐபிஎல் குழுவான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் குழுவை உற்சாகப்படுத்தவும், கிரிக்கெட் போட்டியை கண்டுமகிழவும் வந்திருந்தார். அதே நேரம் ஆசீட் வீச்சால் பாதிக்கப்பட்டு, மீண்ட அவரின் ரசிகர்கள் சிலர் அவரை சந்திக்க விரும்பினர். சற்றும் யோசிக்காமல் அவர்களுக்கு தனியாக நேரம் ஒதுக்கி கலந்துரையாடல் மற்றும் உணவு விருந்து எனமகிழ்வித்துள்ளார். சந்தோஷமாக அவரின் சிறப்பு ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இந்தப் புகைப்படங்கள் டிரெண்டிங்கில் மாஸ் காட்டி வருகின்றனர். பலரும் இதனால்தான் நீங்கள் ‘கிங் ஆஃப் ஹார்ட்ஸ்’ எனவும் பாராட்டி வருகிறார்கள்.

The post மீண்டும் ஒரு மகளிர் மட்டும்! appeared first on Dinakaran.

Tags : Trentanar Spring Kumari ,Dinakaran ,
× RELATED உயிர்களை பறிக்கும் ஆன்லைன்...