×

ஆந்திர மாநிலத்தில் 4 ஆண்டு கால ஆட்சியில் செய்ய முடியாமல் தேர்தல் நெருங்கும் நேரத்தில் புதிய திட்டம் அறிவித்து ஆளும் கட்சி மக்களை ஏமாற்றுகிறது

*தெலுங்கு ேதசம் மண்டல தலைவர் குற்றச்சாட்டு

சித்தூர் : 4 ஆண்டு கால ஆட்சியில் செய்ய முடியாத ஆளும் கட்சி தேர்தல் நெருங்கும் நேரத்தில் மக்களை ஏமாற்றி வருகிறது என்று தெலுங்குதேசம் மண்டல தலைவர் குற்றம்சாட்டி உள்ளார்.
சித்தூர் தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்தில் சித்தூர் ரூரல் மண்டல தலைவர் மோகன்ராஜ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ஒரு திட்டத்தை அறிவித்துள்ளார். அந்த திட்டம் என்னவென்றால் ஜெகன் அண்ணாவிடம் தெரிவிப்போம் எனும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.

இதற்காக டயல் எண் 1902 என அறிமுகம் செய்து உள்ளார். இந்த திட்டத்தின் மூலம் பொது மக்களுக்கு எந்த ஒரு பயனும் இல்லை. ஏற்கனவே முன்னாள் முதல்வர் சந்திரபாபு 1100 டயல் எண் என்கிற திட்டத்தை தொடங்கி வைத்தார்.இந்த திட்டத்தின் மூலம் பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். அதிகாரிகள் யாராவது லஞ்சம் பெற்றுக் கொண்டாலும் அல்லது பொது மக்களுக்கு ஏதாவது குறைகள் இருந்தாலும் உடனடியாக 1100 டயல் எண்ணுக்கு தொடர்பு கொண்டால் உடனடியாக பொதுமக்களின் குறைகளை முன்னாள் முதல்வர் சந்திரபாபு தீர்த்து வைத்து வந்தார்.

ஆனால் முதல்வர் ஜெகன்மோகன் இந்த நான்கு ஆண்டுகால ஆட்சியில் இந்த திட்டத்தை அமுல்படுத்தி வந்த நிலையில் தற்போது புதியதாக 1902 என்கிற டயல் என்னை அறிமுகபடுத்தியுள்ளார். இந்த எண்ணிற்கு போன் செய்தால் நேரடியாக முதல்வர் ஜெகன்மோகனிடம் பேசலாம்.உங்களின் குறைகளை முதல்வரிடம் நேரடியாக தெரிவித்தால் அவர் உடனடியாக குறைகளை தீர்த்து வைப்பார் என ஆளும் கட்சி அரசு விளம்பரம் செய்து வருகிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. நான்கு ஆண்டுகளாக அமைதியாக இருந்துவிட்டு தேர்தல் நடக்க ஓராண்டு இருப்பதால் தற்போது 1902 என்கிற டயல் என்னை அறிமுகப்படுத்தி பொதுமக்களை ஏமாற்றும் செயலில் மாநில அரசு ஈடுபட்டு வருகிறது.

இந்த எண்ணிற்கு போன் செய்தால் முதல்வர் ஜெகன்மோகன் எடுப்பதில்லை. அது மட்டும் இல்லாமல் இந்த எண்ணில் ஏதாவது பொது மக்களின் குறைகளை தெரிவித்தால் அந்த குறைகளை தீர்த்து வைப்பதும் இல்லை ஆனால் விளம்பரம் செய்ய பல கோடி ரூபாய் செலவு செய்து வருகிறது. ஆளும் கட்சி அரசு பொறுப்பேற்றதிலிருந்து இந்த நான்காண்டு கால ஆட்சியில் ஏழை எளிய மக்களின் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்வது, கஞ்சா விற்பனை செய்வது போதை பொருட்கள் விற்பனை செய்வது திருட்டு கொலை கொள்ளை உள்ளிட்ட செயல்கள் அதிகரித்து உள்ளது.

இந்த நான்கு ஆண்டுகால ஆட்சியில் செய்ய முடியாத ஆளும் கட்சி அரசு தேர்தல் நெருங்கும் வேளையில் பொது மக்களை ஏமாற்ற முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் பொதுமக்கள் யாரும் ஏமாற தயாராக இல்லை. நீங்கள் எத்தனை புதிய எண்களை அறிமுகப்படுத்தினாலும் ஒருவர் கூட அந்த எண்ணுக்கு போன் செய்து குறைகளை தெரிவிக்க மாட்டார்கள். ஏனென்றால் அந்த குறைகளை தீர்த்து வைக்க ஆளும் கட்சி அரசு நடவடிக்கை எடுக்காது.இவ்வாறு அவர் பேசினார்.இதில் தெலுங்கு தேசம் கட்சி மண்டல துணைத் தலைவர் சப்தகிரி பிரசாத் மற்றும் தெலுங்கு தேச கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

The post ஆந்திர மாநிலத்தில் 4 ஆண்டு கால ஆட்சியில் செய்ய முடியாமல் தேர்தல் நெருங்கும் நேரத்தில் புதிய திட்டம் அறிவித்து ஆளும் கட்சி மக்களை ஏமாற்றுகிறது appeared first on Dinakaran.

Tags : Andhra ,ruling party ,Yetasam ,Mandal ,President ,Chittoor ,Andhra State ,
× RELATED ஆந்திராவில் பறிமுதல் செய்யப்பட்ட 10...