×

மே 20-ல் திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம் நடைபெறும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: மே 20ல் திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம் நடைபெறும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் மே 20ம் தேதி காலை 10.30 மணிக்கு முதலமைச்சர் மு.க.சாடலின் தலைமையில் கூட்டம் நடைபெறவுள்ளது. கலைஞர் நூற்றாண்டு விழா தொடர்பாக திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

திமுகவின் உடைய பொதுக்குழுவிற்கு அடுத்தப்படியாக அதிகாரமிக்க மற்றும் முக்கிய நிர்வாகிகள் கொண்ட உயர்நிலை செயல் திட்டக்குழு வருகின்ற 20ம் தேதி காலை 10.30 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என திமுகவுடையே பொது செயலாளர் துறைமுருகன் தெரிவித்திருக்கிறார்.

ஏற்கனவே திமுகவின் உடைய முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா அறிவிக்கப்பட்டு பல்வேறு மாவட்டங்களிலும் அதற்கான ஏற்பாடுகளானது மிக தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையில் திமுகவின் உடைய முன்னாள் தலைவர் கலைஞர் அவர்களின் உடைய நூற்றாண்டு விழா தொடர்பாக திமுகவின் உடைய இந்த உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டமானது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் திமுகவின் உடைய பொதுச்செயலாளர் துரைமுருகன் பொருளாளர் பாலு மற்றும் திமுகவின் உடைய செயல் திட்டக்குழுவில் 20 பேர் இருக்கின்றதால் பொன்முடி, தயாநிதி மாறன், ஆகியோர் 20க்கும் மேற்பட்ட உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளவிருக்கிறார்கள்.

The post மே 20-ல் திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம் நடைபெறும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : General Secretary ,Durimurugan ,High ,Djagam High Representative ,Chennai ,Thuraymurugan ,Dizhagam High Project ,Chennai Anna ,Dinakaran ,
× RELATED அழகு முத்துக்கோன் சிலைக்கு அதிமுக...