×

பிரகதீஸ்வரர் கோயிலில் அருங்காட்சியகம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணிகள் தீவிரம்: அதிகாரிகள் ஆய்வு..!!

அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயம்கொண்டம் அருகே கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றது. கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் இருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவில் மாளிகைமேடு என்ற இடத்தில் ராஜேந்திர சோழனின் அரண்மனை இருந்ததாக தகவல் வெளியானது.

இதை அடுத்து அங்கு மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. அகழ்வாராய்ச்சியின் போது கிடைக்கும் வரலாற்று சிறப்பு மிக்க தொன்மையான பொருட்களை அருங்காட்சியகத்தில் கட்சி படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதை ஏற்று அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது.

அதன்படி பிரகதீஸ்வரர் கோயிலில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடத்தை அதிகாரிகள் தேர்வு செய்தனர். சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி, அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன், தொல்லியல்துறை இயக்குனர் காந்தி, மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி உள்ளிட்டோர் இந்த ஆய்வில் பங்கேற்றனர். இடம் தேர்வானதும் அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பிரகதீஸ்வரர் கோயிலில் அருங்காட்சியகம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணிகள் தீவிரம்: அதிகாரிகள் ஆய்வு..!! appeared first on Dinakaran.

Tags : Pragatheeswarar ,Ariyalur ,Cholapuram ,Pragatheeswarar temple ,Jayamkondam ,Ariyalur district ,
× RELATED அரியலூர் அரசு ஐடிஐயில் மாணவர்கள்...