×

மணல்மேடு பஞ்சாலை இடத்தில் ஆயத்த ஆடை பூங்கா: திருப்பூர் டெக்ஸ்டைல் சங்கத்தினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு..!!

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மணல்மேடு பகுதியில் பாழடைந்த பஞ்சாலை கட்டிடங்கள் உள்ள இடத்தில் ஆயத்த ஆடை பூங்கா அமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளபட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பகுதியில் 42 ஏக்கரில் 1965 ஆம் ஆண்டு முதல் இயங்கி வந்த பஞ்சாலை நஷ்டம் காரணமாக 2003ம் ஆண்டு மூடப்பட்டது. தற்போது அந்த இடத்தில 5 ஏக்கரில் 2014ம் ஆண்டு முதல் அரசு கலை கல்லூரி இயங்கி வருகிறது.

மீதமுள்ள 37 ஏக்கர் நிலம் பாழடைந்த கட்டிடங்களுடன் காடு போல காட்சியளிக்கிறது. இந்நிலையில் வேதாரண்யத்தை போன்று ஆயத்த ஆடை பூங்கா அமைப்பது குறித்து திருப்பூர் ஏற்றுமதி உற்பத்தியாளர் சங்கத்தின் துணை தலைவர் முரளி தலைமையில் மயிலாடுதுறை எம்.எல்.ஏ ராஜ்குமார் முன்னிலையில் குழுவினர் ஆய்வு நடத்தினர். ஆய்வு அறிக்கையை விரைவில் தமிழ்நாடு அரசிடம் வழங்கவுள்ளோம் என்றும் ஆய்வு குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த இடத்தில் ஆயத்த ஆடை பூங்காவை அமைத்து இப்பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது.

The post மணல்மேடு பஞ்சாலை இடத்தில் ஆயத்த ஆடை பூங்கா: திருப்பூர் டெக்ஸ்டைல் சங்கத்தினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு..!! appeared first on Dinakaran.

Tags : Sandmad Pancalai Place ,Tiruppur ,Mayaladudura ,Palchalai ,Garment Park ,Sandmad Panjalai Place ,Dinakaran ,
× RELATED திருப்பூரில் பெட்ரோல் பங்கில்...