×

மருத்துவ மாணவி வங்கிகணக்கிலிருந்து திருடுபோன ரூ.3 லட்சத்தை திருப்பி தர PAYTM-க்கு உத்தரவிடும்படி RBI-க்கு சென்னை ஐகோர்ட் ஆணை

சென்னை: PAYTM மூலம் வங்கி கணக்கை முடக்கி மருத்துவ மாணவியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.3 லட்சம் திருடப்பட்டுள்ளது. திருடப்பட்ட பணத்தை திருப்பி வழங்க paytm -க்கு உத்தரவிடும்படி ரிசர்வ் வங்கிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. கொரோனா காலத்தில் பணியாற்றியதற்காக வழங்கப்பட்ட ஊதியம் ரூ.3 லட்சம் தனது வங்கி கணக்கில் திருடப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமது வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டதாக மருத்துவ மாணவி பவித்ரா வங்கி, சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

பேடிஎம் தரப்பு:

மாணவியின் பணம் வங்கி கணக்கில் இருந்து காணாமல் போகவில்லை என்றும் பேடிஎம் கணக்கில் இருந்துதான் காணாமல் போனதாக வங்கி தரப்பு விளக்கம் அளித்துள்ளது. எங்கள் நிறுவன பணப்பரிவர்த்தனை மிகவும் பாதுகாப்பானது என்று பேடிஎம் தரப்பு கூறியுள்ளது. தங்கள் நிறுவனத்தில் பணப்பரிவர்த்தனை செய்வது மிகவும் பாதுகாப்பானது என்றும் பேடிஎம் தரப்பு வாதிட்டுள்ளது. வாடிக்கையாளருக்கு தெரியாமலோ அல்லது அவர் வங்கி கணக்கு விவரங்களை பகிராமலோ பணப்பரிவர்த்தனை நடக்காது என்று பேடிஎம் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

வங்கி தரப்பு:

வாடிக்கையாளருக்கு தெரியாமல் பணம் பரிவர்த்தனை நடக்காது. பேடிஎம் கணக்கில் இருந்து காணாமல் போனதால் தாங்கள் எந்த விகிதத்திலும் பொறுப்பேற்க முடியாது என வங்கி தரப்பில் வாதம் செய்துள்ளனர்.

நீதிபதி உத்தரவு:

மின்னணு பணப்பரிவர்த்தனை செய்யும்படி பொதுமக்களை வங்கி நிறுவனங்கள் ஊக்குவிக்கின்றது. மோசடிகளால் பாதிக்கப்படும்போது வாடிக்கையாளர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். வங்கி நிர்வாகமும் பேடிஎம் நிறுவனமும் மாறி மாறி பழி போடுவது ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல என்றும் 2 வாரங்களில் மாணவியின் பணத்தை திரும்ப அளிக்க வேண்டுமென பேடிஎம் உத்தரவிட ரிசர்வ் வங்கிக்கு உத்தரவு அளித்துள்ளனர்.

The post மருத்துவ மாணவி வங்கிகணக்கிலிருந்து திருடுபோன ரூ.3 லட்சத்தை திருப்பி தர PAYTM-க்கு உத்தரவிடும்படி RBI-க்கு சென்னை ஐகோர்ட் ஆணை appeared first on Dinakaran.

Tags : Chennai ICord ,RBI ,PAYTM ,Chennai ,iCourt ,Dinakaran ,
× RELATED ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒருவழிப்பாதையாக மாற்றம்..!!